சாத்தான்குளம் சம்பவம் . 20 மில்லியன் பேரால் பார்க்கப்பட்ட விடீயோவை நீக்கிய பாடகி சுசித்ரா.

0
1551
suchi
- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் நிகழ்ந்த தந்தை, மகன் மரணம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்து இருந்த காரணத்தினால் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்ஸை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. பின் போலிசார் இரவு முழுவதும் அவர்கள் இருவரையும் ரத்தம் சொட்ட சொட்ட அடித்து உள்ளார்கள். காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர்.

-விளம்பரம்-

இந்த சம்பவம் தமிழகம் மட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் கொழுந்து விட்டு எரிகிறது. மேலும், சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளது. இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு கண்டனங்களை தெரிவித்து பலரும் தங்களுடைய கருத்துகளை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மரணத்துக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சினிமா துறையில் மிக பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வரும் சுசித்ரா அவர்கள் இவர்களின் உயிரிழப்பிற்கு நியாயம் கேட்டு வீடியோ பதிவு ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ இந்திய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் சிபிசிஐடி போலீசார் விடுத்திருக்கும் அறிக்கையில், “பாடகி சுசித்ரா, என்பவரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சாத்தான்குளம் நிகழ்வு குறித்த காணொளி முற்றிலும் உண்மைத்தன்மையற்றது.

இது போன்ற காணொளிகளை வெளியிடுவது வழக்கின் புலனாய்வை பாதிக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் வழிகாட்டியுள்ளது. எனவே பொதுமக்கள் இத்தகைய காணொளிகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவித்தது.இதையடுத்து தான் பதிவிட்ட வீடியோவை பாடகி சுசித்ரா நீக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுசித்ரா, சிபிசிஐடி போலீசார் அழைத்தார்கள். போலி செய்திகளை பரப்பியதற்காக கைது செய்யப்படுவீர்கள் என்று அச்சுறுத்தினார்கள். எனது வழக்கறிஞரின் அறிவுரைப்படி நான் வீடியோவை நீக்கியிருக்கிறேன். மக்கள் இந்த வழக்கை கவனிக்க வேண்டும். பல தவறான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன

-விளம்பரம்-
Advertisement