வனிதாவை திட்டி தீர்த்த சித்ராவின் ரசிகர்கள் – பதிவை நீக்கியதோடு திட்டமிட்டதை நிறுத்திய வனிதா.

0
3376
vanitha
- Advertisement -

பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரசிகர்களும் பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி படப்பிடிப்பை முடித்து விட்டு ஹோட்டலுக்கு சென்ற சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அவரது கணவர் ஹேம்நாத் தான் தங்கி இருந்தார். ஹேம்நாத் அளித்த தகவலின் பெயரிலேயே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர். ஆனால், சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை முன்னுக்கு பின்னாக ஹேம்நாத் கூறி வருவதாக தகவல்கள் வெளியானது.

-விளம்பரம்-

சித்ராவின் மரணத்தை அடுத்து அவரது கணவர் ஹேம்னாத்திடம் 6 நாட்களாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. கடந்த டிசம்பர் 14 சித்ராவின் மரணம் குறித்து இரு தரப்பினரையும் விசாரிக்க ஆர்.டி.ஓ. வுக்கு உத்தரவிடப்பட்டு இருந்த நிலையில் சித்ராவின் பெற்றோர்களிடம் ஆர் டி ஓ விசாரணை நடத்தப்பட்டது. சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் அவரது பெற்றோரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம் நாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையும் பாருங்க : இவருக்கு என்ன தெரியும் ? – மீண்டும் ஆரி பற்றி புறம் பேசத் துவங்கிய பாலாஜி.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சித்ராவின் மறைவு குறித்து தனது யூடுயூப் சேனலில் சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றைநேற்று மாலை 4 மணிக்கு நடத்த இருப்பதாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார் வனிதா. மேலும், அதன் Thumbnail புகைப்படத்தில் வனிதாவும் அவருடைய ஆஸ்தான வழக்கறிஞ்சரான ஸ்ரீதரின் புகைப்படத்தையும் போட்டுஇருந்தார் வனிதா. இந்த பதிவை பார்த்த பலரும் என்று ‘அடுத்தவங்க மரணத்தில் இருந்து கூட பணம் சம்பாதிக்க பார்ப்பீர்களா’ என்றும் செத்தவங்கள வச்சி இப்படி சேனலுக்கு விளம்பரம் தேடுகிறாய் என்று வனிதாவை கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வந்தனர்.

ஆனால், எதிர்பார்த்தப்படி 4 மணிக்கு சித்ரா லைவ்வில் வரவில்லை. அதன் பின்னர் 6 மணிக்கு லைவ் வருவதாக கூறி இருந்தார். ஆனால், வனிதா சொன்னது போல அப்படி எந்த லைவ்விலும் வரவில்லை. மேலும், லைவ் வருவதாக போட்டிருந்த பதிவையும் நீக்கினார் வனிதா. இதற்கு முக்கிய காரணமே வனிதாவை சித்ராவின் ரசிகர்கள் திட்டி தீர்த்தது தான் காரணம்.

-விளம்பரம்-
Advertisement