உன்கூட ஒரு படம் நடிச்சிட்டு விஜய் படற பாட்டிருக்கே, ஐயோ – வனிதா அளித்த பேட்டியை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
1572
vanitha
- Advertisement -

நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாதான் அவ்வப்போது சமூக வளைதளத்தில் விவாதப் பொருளாக மாறி விடுகிறார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரின் திருமண விவகாரத்தில் எண்ணெற்ற பிரச்சனைகள் வெடித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இதனிடையே வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி பீட்டர் அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார்.சமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

பீட்டர் பிரிந்த சோகத்தில் இருக்கும் வனிதா இனி கொஞ்சம் நாள் தான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார் ஆனால் இவர் பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார் அதில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி வருகிறார் வனிதா. இப்படி ஒரு நிலையில் விஜயுடன் இவர் நடித்த ‘சந்திரலேகா படம் வெளியாகி 25 வருடங்கள் ஆனதையொட்டி வனிதா மீண்டும் ஒரு யூடுயூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

ளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் இவர் ராஜ்கிரானுடன் ‘மாணிக்கம்’ படத்தில் நடித்திருந்தார். இந்த ரெண்டு படத்திற்கு பின்னர் திருமணம் ஆன வரை எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த வீடீயோவை கண்டு ரசிகர்கள் பலரும் கமன்ட்டில் கழுவி ஊற்றி வருகின்றனர். ஒரு சில ரசிகர்கள் உன்கூட ஒரு படம் நடிச்சிட்டு விஜய் படற பாட்டிருக்கே, ஐயோ என்று புலம்பி தள்ளி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement