இன்னுமும் பீட்டர் நம்பரை வைத்திருக்கும் வனிதா – மீண்டும் காதலில் இருப்பதாக போட்டதற்கு காரணம் இது தானாம்.

0
1288
vanitha

வனிதா மற்றும் பீட்டர் பவுல் விஷயத்தில் எண்ணற்ற பிரச்சனைகள் வெடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இதனிடையே வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி பீட்டர் அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார்.சமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

This image has an empty alt attribute; its file name is 1-98-743x1024.jpg

இப்படி ஒரு நிலையில் வனிதா, பீட்டர் பவுலுடன் மீண்டும் இனைய ஆசைப்பட்டடதாகவும். ஆனால், அதற்கு பீட்டர் பவுல் ஒப்புக்கொள்ளாமல் வனிதாவை துரத்தி விட்டதாக சமூக வலைதளத்தில் சில செய்திகள் வைரலானது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ள வனிதா, நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயல்வதாகவும் ஆனால் நிராகரிக்கப்பட்டதாகவும் சில ஆதாரமற்ற வதந்திகள் உலவுகின்றன. தயவுசெய்து இதுபோன்ற மாயைகளிலிருந்து வெளியே வாருங்கள். ஏனென்றால் என் வாழ்க்கையில் யாருமே என்னை நிராகரித்ததில்லை. நான்தான் யாரையாவது நிராகரித்திருப்பேன்.

- Advertisement -

இதற்கு முன் நான் என் உறவுகளைச் சரிசெய்ய என்னால் முடிந்த சிறந்த முயற்சிகளைச் செய்திருக்கிறேன், பல அபத்தங்களைப் பொறுத்திருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்துக்குப் பிறகு பொறுக்க முடியாமல் போனதால்தான் நான் அந்த உறவில் இருந்து வெளியேறினேன். என்னால் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ முடியாது. நான் அப்படிப்பட்டவள் கிடையாது. அதனால், தயவுசெய்து உங்கள் கற்பனைகளை நிறுத்துங்கள் என்று கூறி இருந்தார். ஆனால், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மீண்டும் காதலில் இருப்பதாக பதிவிட்டு உமா ரியாஸ் பெயரை டேக் செய்து இருந்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் வனிதா, மீண்டும் காதலில் விழுந்துள்ளாரா என்று வியப்படைந்தனர். உண்மையில் வனிதா, உமா ரியாஸ் நடத்தும் யூடுயூப் சேனலில் நடத்தி வரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார். அப்போது உமா ரியாஸ், கொடுத்த சவாலை ஏற்று தான் வனிதா இப்படி பதிவு செய்துள்ளார். மேலும், பீட்டர் பவுல் நம்பரை இன்னும் செல் போனில் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, அவர் அப்போதே போனை தோலைத்தவிட்டார், இருப்பினும் அவருடைய நம்பர் இன்னும் என் போனில் இருக்கிறது என்று கூறியுள்ளார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement