சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார். அதற்கு பிறகு இவரைக் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன.
மேலும், வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகை வனிதா ஐட்டம் டான்ஸ் ஒன்று காத்து என்ற படத்தில் ஆடி உள்ளார். இந்த படத்தை தவசிராஜன் இயக்கி தயாரித்து வருகிறார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.இதனை தொடர்ந்து நடிகை வனிதா அவர்கள் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:
இந்த சூழ்நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். இது ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சி. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு. இந்த பிக் பாஸ் வேறு. அதோடு இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் முதல் நாளே பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடமும் வனிதா சண்டை போட்டு இருக்கிறார். வீட்டில் ஒவ்வொருவரையும் வனிதா புரட்டி எடுத்து வருகிறார்.
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா:
இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி குறித்தும், வனிதா குறித்தும் அவருடைய மூத்த மகள் ஜோத்விகாவிடம் வனிதாவின் கடையில் சமீபத்தில் பேட்டி ஒன்று எடுத்து இருந்தார்கள். அதில் வனிதாவின் மகள் கூறியிருப்பது, பிக் பாஸ் வீட்டில் என் அம்மா சண்டை போடுகிறார் என்று சொல்கிறார்கள். அதனால் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி பேமஸ் ஆக இருக்கு. சும்மா வந்து உட்கார யாரும் வரல. அதோடு தினமும் நாம் செய்யும் விஷயம் திடீரென்று கிடைக்கவில்லை என்றால் யாராக இருந்தாலும் கோபம் வரும். இதை ஒரு பெரிய சர்ச்சையாகி சோஷியல் மீடியாவில் பேசுகிறார்கள். அம்மா பிக்பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன் எது வந்தாலும் நின்று சமாளி, தைரியமாக போராடு என்று சொல்லி தான் சென்றார்கள்.
வனிதா மகள் அளித்த பேட்டி:
அவர்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்று வனிதா மகள் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு கஸ்டமர் கடைக்குள் நுழைகிறார். உடனே அவர்கள் இன்டர்வியூ நடந்துகொண்டிருக்கிறது வெளியே செல்லுங்கள் என்று சொல்கிறார். ஆனால், அந்த கஸ்டமர் பெண், நீங்கள் வனிதா மகள் தானே? உங்களிடம் இரண்டு கேள்விகள் கேக்கணும் என்று வலுக்கட்டாயமாக பேசுகிறார். ஆனால், இன்டர்வியூ எடுப்பவர்களும், வனிதா மகள், நண்பர் எல்லோரும் சேர்ந்து அந்த பெண்ணை காத்து இருக்க சொல்கிறார்கள். ஆனால், அந்த பெண் போகாமல் வலுக்கட்டாயமாக வனிதாவை பற்றி தாறுமாறாக பேசுகிறார்.
வனிதா மகளை வம்பிழுத்த பெண்:
பின் அந்த பெண் வனிதா மகளிடம் வனிதாவை பற்றியும், கேரக்டர் பற்றியும் எல்லோருக்குமே தெரியும் என்று அவர்களை பற்றி தரக்குறைவாக பேசுகிறார். இதனால் கோபமடைந்த வனிதாவின் மகளும் அந்தப் பெண்ணிடம் சண்டைக்கு நிற்கிறார். இப்படியே இவர்கள் மாற்றி மாற்றி வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும்போது வனிதாவின் கசின் இப்ப வெளியே போகவில்லை என்றால் பூட்டாலேயே தலையில் அடித்து விடுவேன் என்று மிரட்டுகிறார். பின் இவ்வளவு கேவலமானவர்களை பார்க்கவில்லை என்று திட்டிவிட்டு அந்தப் பெண் வெளியே போகிறார். இப்படி அந்தப் பெண் வலுக்கட்டாயமாக வனிதா மகளை வம்பிழுத்து இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.