தண்ணி அடிக்காம பேசின நல்லா இருக்கும் – வனிதா அளித்த பேட்டியை கண்டு கலாய்த்த பிரபலம் .

0
1438
vanitha

நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாதான் அவ்வப்போது சமூக வளைதளத்தில் விவாதப் பொருளாக மாறி விடுகிறார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவரின் திருமண விவகாரத்தில் எண்ணெற்ற பிரச்சனைகள் வெடித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இப்படி ஒரு நிலையில் பீட்டர் பவுல் குடிக்கு அடிமையாகி விட்டதால் அவரை பிரிந்து விட்டதாக கூறி இருந்தார் வனிதா. அதேபோல பீட்டர் பிரிந்த சோகத்தில் இருக்கும் வனிதா இனி கொஞ்சம் நாள் தான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார் ஆனால் இவர் பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

- Advertisement -

அதில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி வருகிறார் வனிதா. இப்படி ஒரு நிலையில் சனம் ஷெட்டி பற்றி பாலாஜி தவறாக பேசியது குறித்து வனிதா சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியை பார்த்த பலரும் வனிதா குடித்துவிட்டு பேசுகிறார் என்று கமன்ட் செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிகாக வேறு ஒரு யூடுயூப் சேனலில் பேட்டி ஒன்றை கொடுத்து வரும் ரவீந்திரன் வனிதாவின் இந்த பேட்டியை கலாய்த்துள்ளார்.

வீடியோவில் 40 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

அதில், சில பேர் சொன்னார்களாம், நாங்களாவது பிக் பாஸ் போயிட்டு வந்து பேசுகிறோம். சில பேர் எந்த தகுதியும் இல்லாமல் பேசுகிறார்களாம். தகுதி இருந்து பேசுறோமோ, தகுதி இல்லாமல் பேசுறோமோ என்பது முக்கியம் இல்லை, தண்ணி அடிக்காம பேசின நல்லா இருக்கும் என்றும், யார் பேசினாலும் ஒரு ரிவியூ பண்ணும் போது தண்ணியடிக்காம பேசுங்க என்பது என்னுடைய கருத்து என்று கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை வனிதா, பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டும் தான் பிக் பாஸ் குறித்து பேட்டி கொடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement