சந்திரலேகா படத்தில் வனிதா வாங்கிய சம்பளம். அவரே சொன்ன தகவல்.

0
34848
Vanitha
- Advertisement -

சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். பின் நடிகை வனிதா 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

-விளம்பரம்-

வீடியோவில் 16:35 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

நடிகை வனிதா அவர்கள் ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது நடிகை வனிதா அவர்கள் தனியாகத்தான் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். நடிகை வனிதாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளார்கள். சமீபத்தில் கூட இவர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை வனிதா.

பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு மிகப்பெரிய ரீ-என்ட்ரியாக அமைந்திருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சந்திரலேகா’ தொடரில் சிறப்பு கதாபத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசையும் தட்டிச் சென்றார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா தனது முதல் சம்பளம் குறித்து பேசியுள்ளார்.

-விளம்பரம்-

அதில், தற்போது இருக்கும் டாப் நடிகைகள் 5 கோடி 6 கோடி என்ற சம்பளம் வாங்குகிறார்கள். தற்போது லட்சங்கள் என்பது சாதாரண விஷயம் ஆகி விட்டது. ஆனால் 90 களில் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் போல அப்போது இருந்த டாப் நடிகைகள் அதிகபட்சமாக 10 லட்சம் தான் சம்பளம் வாங்கினார்கள். ஆனால் என்னுடைய முதல் படத்தில் நான் ஐந்து லட்சம் சம்பளம் வாங்கினேன் என்று கூறியுள்ளார் வனிதா

Advertisement