உங்க பிரச்சனையில கவின ஏன் இழுக்கிறீங்க? வனிதா மீது கடுப்பான கவின் ரசிகர்கள்.

0
28299
vanitha
- Advertisement -

பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் பற்றிய செய்திகள்தான் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் வனிதா தனது மூன்றாவது திருமணம் குறித்து அறிவித்த போது பெரும்பாலானோர் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி அவரை விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று பீட்டரின் முதல் மனைவி எலிசபெத் அளித்த புகாரை அடுத்து வனிதாவுக்கு பெரும் எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. ரசிகர்களை தாண்டி பல்வேறு பிரபலங்களும் வேறு ஒரு நபரின் கணவரை விவாகரத்து பெறாமல் எப்படி திருமணம் செய்யலாம் என்று வனிதாவை விமர்சித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஆனால், அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் வழக்கம்போல தாட்பூட் என்று சத்தம் போட்டு வருகிறார் வனிதா. இப்படி ஒரு நிலையில் கவின் நடித்த நட்புனா என்ன தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சமீபத்தில் வனிதா – பீட்டர் திருமணம் குறித்து பேட்டியளித்திருந்தார். இதனால் கடுப்பான வனித, ரவீந்தருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி இருந்தார். அதில் பப்ளிசிட்டிக்காக என்னை பற்றி ஏன் பேசுகிறீர்கள். நீங்கள் யார் என்பது எனக்குத் தெரியும். பிக்பாஸ் சமயத்தில் கவினை பற்றி பேசி பிரபலத்தை தேடிக் கொண்டவர் தானே என்று கூறியிருந்தார். மேலும், தனது திருமணம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் தன்னை மிரட்டியதாக பேட்டியில் தெரிவித்திருந்தார் தயாரிப்பாளர் ரவீந்தர்.

- Advertisement -

ஆனால், தொடர்ந்து பல்வேறு பேட்டிகளில் பங்கேற்று வரும் ரவீந்தர், நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், இந்த விஷயத்தில் நான் சொன்ன விஷயங்கள் தவறு இல்லை என்றும் ஸ்ட்ராங்காக இருந்து கொண்டு தான் வருகிறார். இந்த நிலையில் ரவிந்த்ரனுக்கு தான், அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் ஆடியோக்கள் அடங்கிய பதிவின் லிங்க் ஒன்றை ட்விட்டரில்பகிர்ந்துள்ளார். மேலும், இந்த விஷயத்தில் கவின் ரசிகளிடம் ஆதரவு கேட்டு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார் வனிதா.

அனைத்து கவின் ரசிகர்களளே இந்த நபர் தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுகிறார். இவர் கண்டிப்பாக வருத்தப்பட வேண்டும் ஊடகங்கள் அனைத்தும் இதுபோன்ற பயனில்லாத யாரென்று தெரியாத நபர்களிடம் மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்விகளை கேட்பதை நிறுத்த வேண்டும் என்று பதிவிட்டிருந்தார் இந்த விஷயத்தில் கவின் ரசிகர்கள் தனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என்று வனிதா எதிர்பார்த்தார்.

-விளம்பரம்-

ஆனால் வனிதாவின் இந்த டிவீட்டால் கவின் ரசிகர்கள் கடுப்பாகி இருக்கிறார்கள். இது உங்கள் தனிப்பட்ட விஷயம்ன்னு சொன்னீங்க ? இப்ப எதுக்கு கவின் ரசிகர்களை கூப்பிடுறீங்க. இது உங்கள் தனிப்பட்ட விஷயம் நீங்கள் இதை பார்த்துக் கொள்ளுங்கள். கவின் ரசிகர்கள் அவருக்கு என்றும் ஆதரவாக இருப்பார்கள. ஆனால் உங்களின் தனிப்பட்ட பிரச்சினைக்கு அவர்கள் வரமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்கள்.

Advertisement