‘சமந்தாவுக்கே டப் கொடுப்பீங்க போல’ – ஐட்டம் சாங் ஆடும் வனிதாவின் புகைப்படத்தை கேலி செய்யும் ரசிகர்கள்.

0
368
- Advertisement -

ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வனிதா விஜயகுமாரின் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. சோசியல் மீடியாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். இவரை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

பிக் பாஸுக்கு பின்னர் கலக்கும் வனிதா :

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்தே இவரைக் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்து வண்ணம் உள்ளன. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

- Advertisement -

இவர் தற்போது படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் ஐட்டம் பாடல்கள் என்றாலே அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது சில்க்ஸ்மிதா தான். ஆனால், தற்போது பல நடிகைகள் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்கள்.

சமந்தாவை தொடர்ந்து வனிதா :

அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்கப்பட்டு உள்ளது. இந்த பாடலுக்கு சமந்தா படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு இருந்தார். இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக குத்தாட்டம் ஆட போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவுடன் போஸ்ட் செய்திருக்கிறார்.

-விளம்பரம்-

வனிதாவின் ஐட்டம் பாடல் :

தற்போது இந்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புகைபடத்தில் நடிகை வனிதா விஜயகுமார் மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் கண்களில் வித்தியாசமான ஐலேஷ் போட்டுக் கொண்டு உள்ளார். மேலும், ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனம் ஆடப் போகிறேன் என்று வனிதா விஜயகுமார் அறிவித்ததும் ரசிகர்கள் உற்சாகத்தில் லைக்ஸ்களையும் கமெண்ட்டுகளையும் அள்ளி குவித்து வருகின்றனர். மேலும், நடிகர் பிரசாந்தின் அந்தகன், பவர்ஸ்டார் சீனிவாசன் உடன் ஒரு படம், நடமாடும் தங்க நகைக்கடை ஹரி நாடார் உடன் ஒரு படம் என ஏகப்பட்ட படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை வனிதா விஜயகுமார்
ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட உள்ளார்.

ரசிகர்களின் கமெண்ட்ஸ் :

மேலும், காத்து எனும் டைட்டிலில் உருவாகி வரும் புதிய படத்தில் தான் இப்படி ஒரு குத்தாட்டம் பாடலுக்கு வனிதா ஆட போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு சூழலில் நடிகை சமந்தாவுக்கு டப் கொடுக்கும் விதமாக குத்தாட்டம் போட உள்ளார் வனிதா விஜயகுமார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து இருக்கிறார்கள். இவரின் அட்டகாச ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement