யூடுயூப்ல இருந்து மெயில் வந்துச்சி நீங்க யாரு வனிதானு, இவ்ளோ பவர்புல்லா இருக்கீங்களேனு – அர்த்த ராத்திரியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த சிங்கப்பெண் வனிதா.

0
3024
vanitha
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் காவலின் திருமண விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதாவின் திருமண விஷயத்தில் பீட்டர் பவுலின் மனைவியான எலிசபெத்திற்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கஸ்தூரி என்று பல்வேறு பிரபலங்களும் இந்த சர்ச்சை குறித்து தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
vanitha

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் லைவ் பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனை வனிதா, தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்தார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் வனிதாவுக்கு எதிர்ப்புகளும் குவிந்தது. இதனால் வனிதா தனது ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியேறினார். இப்படி ஒரு நிலையில் நேற்று வனிதா காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்திருக்கிறார் . அப்போது அவரிடம் ஏன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து ஏன் விலகினீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த வனிதா, ட்விட்டர் பக்கம் சென்றாலே எரிச்சலாக இருக்கிறது. அதிலும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு என்னுடைய பெயரை எடுத்துக் கொண்டிருக்கிறார். எங்கு சென்றாலும் என்னுடைய சுகமாகத்தான் இருக்கிறது யூடியூப் சென்றாலும் என்னுடைய முகம் இல்லாத எந்த ஒரு செய்தியும் இல்லை. அவ்வளவு ஏன் யூடியூப் இடமிருந்து கூட எனக்கு மெயில் வந்தது. நீங்கள் யார் வனிதா? வனிதா என்ற பெயர் இவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கிறது என்று யூடியூபே குழம்பிப்போய் இருக்கிறது. அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் என்னுடைய பெயர் தான்.

vanitha

இதையெல்லாம் பார்த்து எனக்கு எரிச்சல் தான் ஏற்பட்டது அதனால் தான் நான் ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகி விட்டேன் என்று கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் வனிதா தனது ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து விலகினார். ஆனால்,நேற்று மீண்டும் தனது டுவிட்டர் கணக்கை ஆக்டிவேட் செய்திருந்த வனிதா, சமீபத்தில் தனது அனைத்து ட்வீட்களையும் நீக்கி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் நேற்று சூர்யா தேவியையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் அவரிடமும் விசாரணை நடந்து இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement