இதெல்லாம் தேவையா ? தன் துணிக்கடைக்காக வனிதா செய்துள்ள விஷயம். கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
684
vanitha
- Advertisement -

வயசான காலத்தில் இதெல்லாம் உங்களுக்கு தேவையா! என்று நெட்டிசன்கள் வனிதாவை கிண்டலடித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார்.

-விளம்பரம்-

பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார் வனிதா. மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதா:

இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். இருந்தும் இவரைக் குறித்து பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இவர் காத்து என்ற படத்திற்கு நடனம் ஆடி இருக்கிறார்.

வனிதா நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து நடிகை வனிதா அவர்கள் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டு இருந்தார். மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

-விளம்பரம்-

வனிதா செய்யும் வேலைகள்:

இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றியம் கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் நடிப்பை தவிர பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொல்லப்போனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதா வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்லலாம். தற்போது இவர் தனியாக boutique ஒன்றை நடத்தி வருகிறார். முன்பு போல் இல்லாமல் இப்போது வனிதா பயங்கர மாடர்னாகவும் மாறிவிட்டார்.

வனிதாவை கிண்டல் செய்த நெட்டிசன்கள்:

இந்த நிலையில் வனிதாவை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, வனிதா அவர்கள் துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதில் பொம்மைகளுக்கு டிரஸ் போட்டு போஸ் கொடுப்பதை போல வனிதாவும் ஆடை அணிந்து மாடலிங் செய்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் அவர் பகிர்ந்து இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், ஆடை விற்க என்ன பண்றீங்க? மாடலிங் பண்ண வேண்டிய வயசா உங்களுக்கு என்றெல்லாம் கமெண்ட் போட்டு வனிதாவை கேலி செய்து வருகிறார்கள். மேலும், நீங்க யூஸ் பண்ண ட்ரெஸ்ஸ தான் கடைல விக்கிறீங்களா என்றும் கேலி செய்து வருகின்றனர்.

Advertisement