இது அப்போவே தெரிஞ்சி இருந்தா செருப்பால அடிச்சி அனுப்பி இருப்பேன் – என்ன மன்னிச்சிருங்க எலிசபத். வனிதா கண்ணீர் பேட்டி.

0
226079
vanitha

கடந்த இரு தினங்களாக வனிதா மற்றும் பீட்டர் பவுல் விஷயம்தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. மூன்றாம் திருமணம் செய்து கொண்ட வனிதா சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாமல் பீட்டர் பவுல் உடன் வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று தயாரிப்பாளர் ரவீந்திரன் போட்ட பதிவின் மூலம் தெரியவந்தது. இதுகுறித்து வனிதா இன்று காலை தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் அந்த பதிவில் பீட்டர் பவுலை பிரிந்து விட்டாரா இல்லையா என்பதை தெளிவாக அவர் குறிப்பிடவில்லை.

vanitha

இப்படி ஒரு நிலையில் இந்த விஷயம் குறித்து நடிகை வனிதா தனது யூட்யூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில் அவர் கூறியுள்ளதாவது, பீட்டர் பவுலுக்கு விவாகரத்து ஆனது பற்றி எனக்கு ஆரம்பத்தில் தெரியாது அப்படி தெரிந்திருந்தால் நானே செருப்பால் அடித்து விரட்டி இருப்பேன். அவர் மீது நம்பிக்கை இருந்ததால் அதைப் பற்றியெல்லாம் நான் விசாரிக்கவில்லை அவரது மனைவி போலீசிடம் புகார் அளித்த பின்னர்தான் அவர் விவாகரத்து பெறவில்லை என்பதே எனக்கு தெரியும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

அதேபோல பிரிவிற்கான காரணத்தை கூறியுள்ள வனிதா அவருக்கு ஏற்கனவே குடி பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால், நான் அவரை சந்தித்த பின்னர் அதையெல்லாம் விட்டுவிட்டார் இருப்பினும் அவ்வப்போது குடித்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் இருந்தார். இதனால்தான் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்த்தோம் .அவருக்காக நான் சேர்த்து வைத்திருந்த அனைத்து பணத்தையும் செலவு செய்தேன் அவருக்காக நான் ஒரு பத்து பதினைந்து லட்சம் ரூபாய் சிகிச்சைக்காக அளித்து இருக்கிறேன். ஆனால் பணத்தை பற்றி ஒன்றும் பிரச்சினை கிடையாது.

அவர் குணமடைந்தால் போதும் என்றுதான் நினைத்தேன். அதன்பின்னர் மருத்துவர்களும் அவருக்கு இனிமேல் குடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள். அவரும் கொஞ்சம் நாட்கள் ஒழுங்காகத்தான் இருந்தார் சமீபத்தில் நாங்கள் கோவா சென்றபோது அவரது சகோதரர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை என்று போன் வந்தது. அப்போது கிளம்பும்போது அவர் மது அருந்தி இருந்தார். உள்ளே நுழைந்ததும் ஒரு சிகரெட் வாடை அடித்தது. இதனால் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. அங்கிருந்து அவர் கார் ஓட்டி சென்னைக்கு வருவதாக சொன்னார். ஆனால் நான் அதைக் கேட்கவில்லை நானே ஒரு 14 மணிநேரம் காரை ஓட்டிவந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

-விளம்பரம்-

வீட்டுக்கு வந்தவுடன் அவரை காணவில்லை அதன்பின்னர் எங்கெங்கோ சென்று தினமும் குடித்து இருக்கிறார். எனக்கு தெரிந்தவர்கள் அவரை வீட்டில் அழைத்து வந்து விடுவார்கள். நான் எவ்வளவோ அவரிடம் கேட்டேன் நான் அவர் மீது வைத்திருக்கும் அன்பை விட அந்த குடியும் சிகரெட்டும் முக்கியமா என்றெல்லாம் கேட்டேன். ஆனால் அவர்குடிக்கு அடிமையாகி விட்டார் என்னை பற்றி அவர் கவலைப்படவில்லை. எலிசபெத் அனுபவித்த வலி என்னவென்று எனக்கு இப்போது புரிகிறது. அவர் இவரைப் பற்றி சொன்ன ஒரு பத்து சதவீதம் எல்லாம் உண்மை போல தான் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. உங்களை நான் எந்த விதத்திலாவது புண் படுத்தி விட்டால் என்னை மன்னித்துவிடுங்கள் எலிசபெத் என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார் வனிதா.

Advertisement