பிக் பாஸ் சிறையை திறந்த வனிதா.! சிறப்பு விருந்தினருக்கு இவ்வளவு பவர் எப்படி?

0
2224
Vanitha

கடந்த சில வாரமாக மிகவும் சலிப்பாக போய்க்கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற பிறகு மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. மேலும், இந்த வாரம் போட்டியாளர் அனைவர்க்கும் லக்ஸ்சரி பட்ஜட்டிற்கான டாஸ்க் ஒன்றும் கொடுக்கப்பட்டது. இதில் வனிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நேற்றய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் யார் சிறந்த பர்பாமெர் யார் மோசமான பரப்பாமர் என்று முடிவு செய்தனர். இதில் சிறந்த போட்டியாளராக ஷெரின், தர்ஷன், மதுமிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போல அபிராமி மற்றும் கஸ்தூரி ஜெயிலுக்கு அனுப்பபட்டனர்.

இதையும் பாருங்க : சொல்லி வைத்தார் போல மூன்று மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரே நேரத்தில் நடைபெறும் விஷயம்.! 

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் சிறையில் இருந்த அபிராமி, தன்னால் உடம்பிற்கு முடியவில்லை என்னை தயவு செய்து வெளியில் அனுப்புங்கள் என்று கூறியிருந்தார். ஆனால், அதற்கு பிக் பாஸ் எந்த பதிலையும் அளிக்கவில்லை. இதனால் இந்த வார தலைவரான சாண்டி சிறையை திறக்க சென்றார். ஆனால், சேரன், பிக் பாஸ் சொல்லாமல் தீர்க்க கூடாது அது விதி மீறுவது போல இருக்கும் என்று கூறினார்.

இந்த விவாதம் போய்கொண்டே இருக்கும் போது வனிதா, அபிராமியிடம் நான் சொல்கிறேன் நீ வெளியே வா என்று உத்தரவு போட்டார். அதன் பின்னர் வனிதாவுடன் சென்ற லாஸ்லியா சிறையின் கதவை திறந்தவுடன் அபிராமியை கட்டியணைத்தார் வனிதா. அதன் அடுத்த நொடியே பிக் பாஸ், அபிராமியின் சிறை தண்டனை முடிந்து விட்டது என்று அறிவித்தார் பிக் பாஸ்.

பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் சாண்டி சொல்லியே திறக்காத பிக் பாஸ் சிறை ஒரு சிறப்பு விருந்தினராக சென்றுள்ள வனிதா சொல்லி எப்படி திறந்தது என்ற கேள்வி தான் எழுகிறது. இதை வைத்து பார்க்கும் போது வணிதாவிற்கு எந்த அளவிற்கு பிக் பாஸ் சலுகை அளித்துள்ளது என்பது நன்றாக தெரிகிறது.