டான்ஸ் ஆட சொன்னால் வெறும் பஞ்ச் வசனமாக பேசிய வனிதா – ரம்யா கிருஷ்னன் சொன்ன கமன்ட்.

0
1057
vanitha
- Advertisement -

தொலைக்காட்சிகள் அனைத்தும் சீரியலை தாண்டி பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுவிடுகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. அந்த வகையில் சூப்பர் சிங்கர், குக்கு வித் கோமாளி, ஜோடி போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல சீசன்களை கடந்து ஹிட் அடித்தது.

-விளம்பரம்-

என்னதான் பல ரியாலிட்டி ஷோ வந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை அடித்துக்கொள்ளும் வகையில் விஜய் டிவியிடம் வேறு எந்த ரியாலிட்டி ஷோவும் இல்லை என்பது தான் உண்மை. அதனால் தான் பிக் பாஸ் முடிந்தால் கூட பிக் பாஸ் போட்டியார்களை வைத்து எதாவது ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து கொண்டு வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் பிக் பாஸ் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து ஒரு புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை விஜய் டிவி துவங்க இருக்கிறது.

- Advertisement -

சரி, என்ன நிகழ்ச்சி ? நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் ? என்ற கேள்வி எழுகிறதா ? வேறு ஒன்றும் புதுமையான நிகழ்ச்சி இல்லை. விஜய் டிவியில் பல ஆண்டுகள் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியை தான் தற்போது பிக் பாஸ் பிரபலங்களை வைத்து துவங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ‘பிக்பாஸ் ஜோடி’ என்று பெயர் வைத்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 1 முதல் 4 வரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பாலாஜி, நிஷா, கேப்ரில்லா, மோகன் வைத்யா, அனிதா சமப்த் ஆகியோர் போன வாரமே நடனமாடிய நிலையில் இந்த வாரம் ஜூலி, பாலாஜி முருகதாஸ், சம்யுக்தா, ஜித்தன்ரமேஷ் என்று பலர் நடனமாடி இருந்தனர். இதில் வனிதா ஜோடியே இல்லாமல் நடனமாடி இருந்தார். வனிதா, தனது தம்பி அருண் விஜய்யின் ‘அத்தாரு அத்தாரு’ பாடலுக்கு நடனமாடி இருந்தார், இல்லை பன்ச் வசனம் பேசி இருந்தார். இதை பார்த்த ரம்யா கிருஷ்ணன், எனக்கு டான்ஸ் நிறைய இருக்கனும் என்று கூறி சிரித்தார். அதற்கு வனிதா, இன்ட்ரோ என்பதால் கொஞ்சம் இப்படி பண்ணிட்டேன் என்று கூறி இருந்தார். அதே போல தனக்கு ஜோடி எங்கே என்று கேட்டிருந்தார். ஆனால், இவருக்கு அடுத்த வாரம் தான் ஜோடி வருமாம்.

-விளம்பரம்-
Advertisement