வனிதா மற்றும் பீட்டரின் விவகாரம்தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் பீட்டர் பவுல் அளித்த பேட்டியில் அவர் பேசிய வார்த்தைகளே தற்போது அவருக்கு வினையாக வந்து முடிந்திருக்கிறது. பீட்டர் பவுல் மற்றும் வனிதா விஷயத்தில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்த நிலையில் சமீபத்தில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் இருவரும் ஒரு அலுவலகத்தில் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் பீட்டரின் உண்மை முகம் குறித்து பீட்டர் உடன் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரசாந்த் கிருபாகரன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் நீண்ட பதிவை ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அவர் பதிவு செய்ததன் முக்கிய காரணம் என்னவென்றால் சமீபத்தில் வனிதாவுடன் பீட்டர் இணைந்து கொடுத்த பேட்டி இடம்பெற்ற அந்த குறிப்பிட்ட இடம் பீட்டரின் அலுவலகம் கிடையாது. அது உண்மையில் பீட்டர் இயக்குவதாக கூறி வந்த பாலிவுட் கதையின் தயாரிப்பாளரின் அலுவலகம். ஆனால், பீட்டர் அளித்த பேட்டியில் அந்த அலுவலகம் தன்னுடையது என்பது போலவும் அந்த அலுவலகத்திற்கு தினமும் தான் வந்து சென்று போவதாகவும் கூறியிருக்கிறார்.
ஆனால் உண்மையில் கடந்த சில காலமாக அவரை அந்த அலுவலகத்தின் வாசி கூட சேர்ப்பது கிடையாதாம் அது என்னவெனில் பீட்டர் இயக்குவதாக கூறியிருந்த அந்த பாலிவுட் கதையை தயாரித்து இருந்த தயாரிப்பாளரிடம் பீட்டர் கதையை சரியாக கூறாமல் இருந்ததால் அந்த படம் கைநழுவி இருக்கிறதாம். இதனால் தயாரிப்பாளர்கள் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஒருமுறை இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இனி பீட்டரை அலுவலகத்தின் பக்கமே வரக்கூடாது என்று தயாரிப்பாளர் கூறிவிட்டாராம். அப்படியே பீட்டர் வந்தாலும் அவரை கேட்டிற்கு வெளியிலேயே நிற்க வைத்துவிட்டு தயாரிப்பாளர் சென்று பேசிவிட்டு வருவாராம்.
மேலும் பீட்டர் கூறுவது அனைத்தும் பொய் என்று கூறியுள்ள அவரது உதவி இயக்குனர் பிரசாந்த் கிருபாகரன். அவர் சேது படத்திலோ ஆயுத எழுத்து படத்திலோ வேலை செய்யவில்லை என்றும் டிஸ்னியின் வேலை செய்வதாக கூறுவது கூட போய் தான் என்றும் கூறியிருக்கிறார். மேலும், இப்படி ஒரு சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை எடுக்க வேண்டும் என்று ஒரு நாள் மட்டும் அலுவலகத்தில் அனுமதியுங்கள் என்று தயாரிப்பாளரை அவர் கெஞ்சி கேட்டுக் கொண்டதால்தான் அவரை அலுவலகத்தில் அனுமதித்தார். அதுதான் அவர் செய்த தவறு. ஆனால் பீட்டர் அதனை தன்னுடைய அலுவலகம் என்பதைப்போல கூறியிருக்கிறார். இதனால் அவர் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை பாயும் என்று கூறியிருக்கிறார்.