இன்றைய பிக் பாஸ் ப்ரோமோக்களை பார்த்து வனிதா போட்ட ட்வீட் – இதனால் தான் வெளிய வந்துட்டாராம்.

0
337
vanitha
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கி ஏழு வாரத்தை கடந்து உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய்,தாடி பாலாஜி வெளியேறிய நிலையில் வனிதா தாமாக வெளியேறினார். இதை தொடர்ந்து கடந்த வாரம் சினேகன் வெளியேறினார். நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் Kpy சதிஷ் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தனர். அதே போல விக்ரம் பட ஷூட்டிங்கால் கமல் வெளியேறியதை தொடர்ந்து தற்போது சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

இது ஒருபுறம் இருக்க இந்த சீசனில் இருந்து வனிதா வாண்டடாக வெளியேறி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருந்தது. கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமலஹாசனுக்காக தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுகொள்வேன். அவர் இடத்தில் வேறு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.பின் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு தாமாகவே வெளியேறினார்.

- Advertisement -

வெளியேறிய காரணம் குறித்து வனிதா :

வெளியேறிய காரணம் குறித்து கூறிய வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேம் தப்பான டிராக்கில் போய்க்கொண்டிருக்கிறது. என்னை யாரும் ஏன் இப்படி செய்தாய் என்று சொல்லவில்லை. நீ செய்தது சரி தான் என்று என்னை பாராட்டினார்கள்.இரண்டு வாரங்களாகவே எனக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிற மாதிரி தோன்றியது. கமல் சார் வந்து கேள்வி கேட்காமல் நீங்க பண்ணுவது தான் சரி என்று சொல்வது போல நடந்துகொண்டார்.

எனக்கும், ஒரு வேளை என்னை வெளியே நல்லவளாக காண்பிக்கிறார்களோ, இல்லை நான் செய்வது தான் சரி என்று சொல்கிறார்களோ என்று என் மனதுக்குள் தோன்றியது. அதே போல இந்த நிகழ்ச்சியில் கேவலமான நபர்கள் விளையாடுகிறார்கள் அவர்களுடன் விளையாடி என் மரியாதையை குறைத்துகொள்ள முடியாது. பிக் பாஸும் கேவலமான கேம்களை வைக்கிறார் என்றும் குற்றம்சாட்டி வெளியேறினார் வனிதா.

-விளம்பரம்-

பிக் பாஸில் இருந்து வெளியேறிய வனிதா, தன் ட்விட்டர் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பதிவிட்டுள்ள வனிதா, எரிச்சலூட்டும் பைத்தியக்கார வீட்டில் இருந்து நான் வெளியேறியதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். பொழுதுபோக்கு நிகழ்ச்சி இப்போ அதன் பொழுதுபோக்கு அம்சத்தை இழந்துவிட்டது. யாரும் எதிர்த்து கேட்க முடியாத ஒரு சிக்கலான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிவிட்டது. வெளியில் வந்த பின்னரும் அதன் விளைவுகளில் இருந்து மீள முடியாமல் இருக்கிறேன் என்றும் கூறி இருந்தார்.

வனிதா போட்ட பதிவு :

இப்படி ஒரு நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் கலவரமான ப்ரோமோவை கண்டு ட்வீட் ஒன்றை செய்துள்ள வனிதா, வன்முறை, ஆக்ரோஷமான சண்டைகள், தவறான வார்த்தைகள் மற்றும் மன உளைச்சல் ஆகியவை உங்களைக் கொல்லக்கூடும்… நான் அதற்கு எதிராக இருக்கிறேன், அது என் வாழ்க்கையில் சில முக்கிய முடிவுகளை எடுக்க வைத்தது… மேலும் நான் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கிறேன் என்று பதிவிடுள்ளார்.

Advertisement