பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து விமர்சிக்கும் வனிதா – கழுவி ஊற்றிய நெட்டிசன்களுக்கு வனிதா கொடுத்த பதிலடி.

0
761
vanitha
- Advertisement -

நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாதான் அவ்வப்போது சமூக வளைதளத்தில் விவாதப் பொருளாக மாறி விடுகிறார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரின் திருமண விவகாரத்தில் எண்ணெற்ற பிரச்சனைகள் வெடித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இதனிடையே வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி பீட்டர் அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார்.சமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

- Advertisement -

அதில் பேசிய அவர் பீட்டர் பவுலுக்கு குடி மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததாகவும் திருமணத்திற்கு பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவருக்கு 10 15 லட்சத்திற்கு மேல் செலவு செய்து அவரது உயிரை காப்பாற்றியதாகவும் கூறியிருந்தார். மேலும் அவரால் குடிப் பழக்கம் மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியவில்லை என்றும் சமீபத்தில் தனது பிறந்த நாளுக்காக கோவா சென்றிருந்த பொழுது அவர் அங்கே குடிப்பதை பார்த்து தனக்கு ஆத்திரம் வந்ததாகவும் கூறி இருந்தார் வனிதா. அதன் பின்னரும் அவர் குடிப்பழக்கத்தை விடாததால் அவரை பிரிந்து விட்டதாக கூறிய வனிதா முதல் மனைவியான எலிசபெத்திடம் மன்னிப்பும் கேட்டார். மேலும் நான் பாதியில் வந்தவள் பாதியிலேயே சென்று விடுகிறேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருந்தார் வனிதா.

அதேபோல பீட்டர் பிரிந்த சோகத்தில் இருக்கும் வனிதா இனி கொஞ்சம் நாள் தான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார் ஆனால் இவர் பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார் அதில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி வருகிறார் வனிதா. சமீபத்தில் கூட ஷகிலா உடன் இணைந்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த வீடியோவில் கூட மிகவும் சந்தோஷமாகவே காணப்பட்டார் வனிதா.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் பீட்டர் பாவாடை பிரிந்து இருப்பது போல வனிதா நாடகமாடுகிறார் என்று பலரும் விமர்சிக்கத் தொடங்கினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள இது என்னுடைய சமூக வலைதள செயல்பாடுகள் கிடையாது இது என்னுடைய வேலை. வனிதா தர்பார் என்னுடைய நிகழ்ச்சி. பிக் பாஸ்ஸின் ஒரு முன்னாள் போட்டியாளராக இதை நான் செய்கிறேன். யாருக்கெல்லாம் இதன் வேறுபாடு புரியவில்லையோ என்னுடைய தனிப்பட்ட வலிக்காக என்னுடைய வேலையை நான் நிறுத்த முடியாது. வாழ்க்கை சென்று கொண்டுதான் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்

Advertisement