அசிங்கமாக பேசிய வனிதாவை மன்னிப்பு கேக்க சொன்ன நகுல் – அடங்க மறுக்காமல் மீண்டும் வனிதா கொடுத்துள்ள பதில்.

0
7417
vanitha
- Advertisement -

நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாவிற்கு என்றும் சர்ச்சைக்கு பஞ்சம் இருந்தது இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்துள்ள வனிதா சமீபத்தில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். வனிதா வெளியேறியதற்கு முக்கிய காரணம் ரம்யா கிருஷ்ணன் தான் என்றும் அவர் சொன்ன விமர்சனத்தை வனிதாவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-216.jpg

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நகுல் பேசுகையில், நாங்கள் மிகவும் தன்மையாக தான் சொன்னோம். ஆனால், வனிதா எங்களை ஒரு அசிங்கமான பெயரை சொல்லி திட்டியுள்ளார் என்று செட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள் ரம்யா மேடம் எவ்ளோ பெரிய ஆளு. அவர்களை இப்படி பேசலாமா. ரம்யா மேம்மிடம் வனிதா மன்னிப்பு கேக்கணும் என்று கூறி இருந்தார்.

இதையும் பாருங்க : நல்லா சாப்பிடுங்க, இப்படி குச்சி மாதிரி ஆகிட்டிங்களே – ஓவியாவின் லேட்டஸ்ட் போஸை கண்டு ரசிகர்கள் வருத்தம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நகுலின் இந்த பேட்டியை ரசிகர் ஒருவர் வனிதாவிற்கு ட்விட்டரில் டேக் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த வனிதா, நான் என் வாழ்க்கையை பிஸியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த வேலையில்லாத இடியட்களின் உளறல்களை கண்டுகொள்ள எனக்கு நேரம் இல்லை. செட்டில் என்ன நடந்தது என்பதற்கும், அதன் பின் ஜட்ஜுகளை வைத்து மீண்டும் ஷூட் செய்து எடிட் செய்து வெளியிட்டதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

எனக்கு அளிக்கப்பட்ட மார்க்கை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் ஷோவில் தொடர வேண்டாம் என நான் முடிவு செய்தேன். எனக்கு ஒருவருடன் பிரச்சனை வருகிறது என்றால், எங்களுக்கு நடுவில் ஏற்கனவே பிரச்சனை இருந்தது என்று அர்த்தம். அது எங்களுக்கு நடுவில் தான். நாங்கள் இருவரும் வாயை மூடிக்கொண்டிருக்கும் போது, மற்றவர்களும் அதை பற்றி பேசாமல், விமர்சிக்காமல் இருக்க வேண்டும்

-விளம்பரம்-
Advertisement