என்னது அவைலபிளா ? உன் மகள்களுக்காகவாவது இந்த அசிங்கத்த நிறுத்து – திட்டி தீர்த்தவருக்கு வனிதா பதிலடி.

0
12378
vanitha
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வனிதா, வட இந்தியர் ஒருவருடன் தனது நான்காம் திருமணத்தை முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது. மேலும், அவர் ஒரு பைலட் என்றும் 3மாதத்திற்கு ஒரு முறை தான் வனிதாவை வந்து சந்தித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது. மேலும், வனிதாவின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் கூட இதனை உறுதி செய்ததாக செய்தி வெளியிடப்பட்டது. இதனை மறுத்துள்ள வனிதா, என்னைப் பற்றி சினிமா விகடன் தளத்தில் வெளியான செய்தி முழுக்க முழுக்க பொய்யானது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-23.png

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதோடு அப்படி ஒரு நபர் யார் என்றே எனக்குத் தெரியாது. கோயிலுக்கு சாமி கும்பிடப் போனால்கூட குற்றமா, உடனே அவர்களுக்குத் திருமணம் என யாராவது சொன்னால் அதை செய்தியாக்கிவிடுவது தவறில்லையா? என்னை இந்த செய்தி மிகவும் காயப்படுத்தியிருக்கிறது. சினிமா விகடன் இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியுள்ளார். இதர்க்கு சினிமா விகடனும் மன்னிப்பு தெரிவித்து இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த வனிதா, ’நான் இப்போது சிங்கிள் மற்றும் அவைலபிள். தயவு செய்து எனது திருமணம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப ’என்று பதிவு செய்து இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர், என்னது அவைலபிளா ? என்ன ஒரு பொம்பள ? உங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பது ஞாபகம் இருக்கட்டும். உங்கள் மகள்களுக்காவவாவது உங்கள் அனைத்து அசிங்கத்தையும் நிறுத்திவிடுங்கள். அருவருப்பாக இருக்கிறது என்று கமன்ட் செய்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்த வனிதா, நாங்கள் அனைவரும் வளர்ந்து இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையை பாத்துக்கொள்ள எங்களுக்கு தெரியும். எங்கள் கடமை என்ன என்பதும் எங்களுக்கு தெரியும். எனக்கு தேவைப்படும் போது நீ வந்து உதவி செய்யப்போகிறாயா. உன் வாழ்க்கையை நீ வாழ். நான் ஒரு நடிகை என் நடிப்பு பிடித்து இருந்தால் என் படங்களை பார் அவ்வளவு தான். உன் வேலையை நீ பார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement