என் படத்தில் நடித்தே ஆகணும்னு நேர்ல தேடி வந்துட்டான் விக்ரம். வனிதா சொன்ன சீக்ரட்.

0
53755
Vanitha
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா என்பது அறிந்த ஒரு விஷயம். விஜய்யின் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர் வனிதா. அதற்கு பின் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். பின் படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். ஆனால், அதிலும் சில தோல்விகள் ஏற்பட்டது. கடந்த ஆண்டு வனிதா சொத்தைப் பிரித்துக் கொடுங்கள் என்று கேட்டு பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். இதனால் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதற்கு பிறகு தான் வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

-விளம்பரம்-

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றததற்கு முக்கிய காரணமே நம்ம வனிதா தான். பிக் பாஸ் சீசன் 3 இன் வில்லி ஆகவே வனிதா அவதாரம் எடுத்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா சீரியல்களிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார். இந்நிலையில் நடிகை வனிதா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பார்த்துக் கொண்டார். அப்போது தொகுப்பாளர் நடிகர் விக்ரம் குறித்து உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு வனிதா கூறியது, விக்ரமும்,அவர் மனைவியும் எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர்கள். விக்ரம் ஒருமுறை என் தங்கையுடன் படம் நடித்து இருந்தார். அப்போது வயநாட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.

- Advertisement -

அப்போ நான் பிரபலமான, பேசப்பட்டும் நடிகையாக இருந்தேன். என் தங்கை ப்ரீத்தா அப்ப தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருக்கிறார். இது ஒரு மலையாள படம். இந்த படத்தில் நான் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று எங்க அம்மா கிட்ட கேட்டு எப்படியோ பேசி ஒத்துக்க வைத்தார்கள்.பின் அட்வான்ஸ் கொடுத்திட்டு போயிட்டாங்க. பிறகு என் அம்மா என்கிட்ட வந்து இந்த மாதிரி ப்ரீத்தா படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடணும்ன்னு சொல்றாங்க. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. என் குடும்பத்துக்காக நானும் ஓகே என்று சூட்டிங்க்கு வந்து விட்டேன். அந்த படத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் சொல்லி தருபவர் ரீட்டா மாஸ்டர். நானும் ரெடி ஆகி ஸ்பாட்டுக்கு வந்து விட்டேன். பின் ரீட்டா மாஸ்டர் 4 வில்லன்களை தொட்டு கொண்டு சுத்தி ஆடணும் என்று சொல்கிறார்கள்.

வீடியோவில் 3 :45 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

எனக்கு ஒரு நிமிஷம் என்ன பண்ணறது தெரியல. அப்ப நான் ரீட்டா மாஸ்டர் கிட்ட ஒரு நிமிஷம் மாஸ்டர் என்று கேட்டார். அதற்கு பின் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு எஸ்கேப் ஆயிட்டேன். எல்லாரும் என்னை தேடுறாங்க. அது ரொம்ப லேட் நைட்டில் எடுக்கப்பட்ட ஷூட். அதனால டார்ச் லைட் எல்லாம் வைத்து தேடுறாங்க. ஆனால், விக்ரம் வந்து எப்படி கண்டுபிடித்து விடுகிறார். என்னை பார்த்துட்டு உன்னை நான் கொல்லப் போறேன் என்று சொல்லுறாரு. அப்புறம் நான் இந்த மாதிரி எல்லாம் என்னால் நடிக்க முடியாது. எனக்கு ஒரு இமேஜ் இருக்கு. அதை என்னால கெடுக்க முடியாதுன்னு சொல்லுறேன். விக்ரமும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது, ப்ளீஸ் நிறைய செலவு பண்ணி இருக்காங்க எனக்காக நடிங்கன்னு ரொம்ப அமைதியா கேட்டார். இருந்தாலும் என்னால முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று வனிதா கூறினார்.

Advertisement