150 கேமராக்கு முன்னாடி அவங்க டி-ஷர்ட்டை கழட்டினாங்க – பிக் பாஸ் நடிகை குறித்து வனிதா கொடுத்த ஷாக்.

0
81528
Vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் இன் மூன்றாவது சீசன் மாற்ற 2 சீசன்களை விட மாபெரும் வெற்றி அடைந்தது. என்ன தான் கவின் லாஸ்லியா காதல் கதை ரசிகர்களை கவர்ந்தாலும் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் அதிரடியாக சென்றதற்கு காரணம் வனிதா தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த சீசன் தொடங்கிய நாள் முதலே வனிதாவின் குரல் தான் பிக் பாஸில் அதிகம் ஒலித்தது. இதனால் இவருடன் சண்டை போடவே போட்டியாளர்கள் பலரும் யோசித்தனர். மேலும், இதில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களிலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கெட்ட பெயரும் ஏற்பட்டது

-விளம்பரம்-

இதனால் ஒரு சில வாரங்களிலேயே பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டார் வனிதா. இருப்பினும் வனிதா சென்ற பிறகு அவர் சொன்ன அத்தனையும் உண்மையாக நடந்தது இதனால் வனிதாவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கூடியது அதேபோல வனிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற பின்னர் நிகழ்ச்சியில் சுத்தமாக சுவாரஸ்யம் என்பதே இல்லாமல் இருந்தது. இதனால் வனிதாவை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வந்தனர்.பிக் பாஸ் வீட்டில் இருந்த போது இவருக்கும் கஸ்தூரிக்கும் தான் அதிக சண்டை ஏற்பட்டது.

- Advertisement -

இந்த சண்டை பிக் பாஸுக்கு பின்னர் கூட தொடர்ந்தது அதிலும் வனிதாவின் மூன்றாவது திருமண விஷயத்தில் கஸ்தூரி கருத்து தெரிவித்ததால் இவருக்கும் கஸ்தூரிக்கும் ட்விட்டரில் ஒரு பனிப்போர் ஏற்பட்டு இருந்தது.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வனிதா, பிக் பாஸ் வீட்டில் கஸ்தூரி செய்த ஷாக்கிங் செயல் குறித்து கூறியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்திவரும் வனிதா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பிரத்தியேகமான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விவாதித்து வருகிறார்.

வீடியோவில் 22 நிமிடத்தில் பார்க்கவும்

அந்தப் பேட்டியில் பேசியுள்ள வனிதா, பிக்பாஸ் வீட்டில் ஆடை விவகாரத்தில் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் கிடையாது. யார் எப்படி வேண்டுமானாலும் ஆடை அணியலாம். அவ்வளவு ஏன் கடந்த சீசனில் நடிகை கஸ்தூரி பெட்ரூமில் அமர்ந்தபடி குனிந்து டீ-சர்ட்டை கழட்டி வேறு ஒரு டீ-சர்ட்டை போட்டுக் கொண்டார். அவரை சுற்றி 150 கேமரா கூட இருந்தது தெரியாமல் அவர் அப்படி செய்தார். இதனால் ஷாக்கடைந்த நான் அங்கு இருந்து வெளியில் வந்து விட்டேன். நான் வெளியில் வந்தபோது முகேன் மற்றும் தர்ஷன் இருவரும் உள்ளே நுழைய பார்த்த போது. அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்லாதீர்கள் அது என்னமோ செய்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் போனால் அதுஎன்ன செய்யும் என்றே சொல்ல முடியாது என்று கூறி அவர்களை ஒரு பத்து நிமிடம் நிற்க வைத்து பின்னர் அனுப்பினேன் என்று கூறியிருக்கிறார் வனிதா.

-விளம்பரம்-

Advertisement