ஒரு வார கெஸ்ட்டாக உள்ளே நுழைந்துள்ள வனிதா.! ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

0
9558
Vanitha
- Advertisement -

கடந்த சில தினங்களாக காதலும் கடலையுமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவின் என்ட்ரிக்கு பின்னர் தலைகீழாக மாறிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சிறப்பு விருந்தினராகச் சென்று உள்ள வனிதா தான் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நாசுக்காக சண்டையை கிளப்பி விட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நடந்து வருகிறது.

-விளம்பரம்-
Vanitha

வனிதா சென்ற பின்னர் பிக் பாஸ் வீட்டில் ஸ்வாரோசியமே இருக்கவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்தனர். அதன் பின்னர் சாக்க்ஷி அபி லாஸ்லியா என்று பலரை வைத்து காய் நகர்த்தினாலும் வனிதா ஒரு நபர் கொடுத்த கண்டன்ட்க்கு ஒரு பத்து சதவீதம் கூட மற்றவர்களால் கொடுக்க முடியவில்லை. எனவே, வனிதாவிற்கு நிகராக ஒரு போட்டியாளரை களமிறக்கலாம் என்று காஸ்தூரியை கொண்டு வந்தனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டில் சீறி பாய்வாங்கனு பார்த்தா இப்படி சிறையில் ஒக்கார வச்சிட்டாய்ங்களே பாவம்.! 

- Advertisement -

கஸ்தூரி சர்ச்சைக்கும் கொஞ்சம் சளைக்காத ஒரு நபர் தான். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரப் போகிறார் என்று சொன்னதும் இவர் வனிதாவை விட சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவரை மற்ற போட்டியாளர்கள் ஒரு காமெடி பீஸை போல தான் பார்த்து வருகிறார்கள் என்பது தான் உண்மை.

இதனால் மீண்டும் வனிதாவை பிக் பாஸ் வீட்டிற்குள் கொண்டு வர முடிவு செய்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே வனிதா வந்த இரண்டே நாளில் நிகழ்ச்சி சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வனிதா இந்த வாரம் முழுக்க பிக் பாஸில் தான் இருக்க போகிறார். இதற்காக வனிதாவிற்கு ஒரு நாள் சம்பளமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  கொடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement