கடன் தொல்லையால் குடும்பத்துடன் வெளிநாடு சென்று ஹோட்டலை ஆரம்பித்தோம் – வனிதா பேட்டி.

0
111966
vanitha-family

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சொர்ணாக்காவாகவே பிரதிபலித்தவர் நடிகை வனிதா விஜயகுமார். ஒரு காலத்தில் இவர் தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக திகந்தவர். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நடிகை தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். நடிகை வனிதாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளார்கள். இவர் தன் குடும்பத்தில் இருந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.

Image result for vanitha with his family

சமீபத்தில் கூட இவர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.. பின் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் வனிதா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சில வாரங்களுக்கு முன் தான் வெற்றிகரகமாக முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றியாளராக வனிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது வனிதா வெற்றியாளராக பிசியாக நடித்து கொண்டு வருகிறார். மேலும், இவர் சிரியல்களில் நடித்தும், நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் நடிகை வனிதா அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில் வனிதா அவர்கள் தன்னுடைய அம்மா மஞ்சுளா குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அதில் அவர் கூறியது, என்னுடைய வாழ்க்கை பயணத்தில் மறக்க முடியாத அனுபவம் என்று சொன்னால் நாங்கள் நாங்கள் குடும்பத்தோடு அமெரிக்காவிற்கு சென்றது தான். நான் எங்க குடும்பத்தோடு சேர்ந்து முதல்ல போன பயணம். அப்ப நாங்க எல்லாருமே ஒரே கலரில் டிரெஸ் போட்டு போனோம். அதை என்னால மறக்கவே முடியாது. அதாவது அக்னி நட்சத்திரம் படத்துக்கு ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்னாடி நாங்கள் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலாகி இருந்தோம். அப்போது அப்பா வந்து ஹீரோவா இருந்து ரஜினி வில்லனாகிறார். அதுக்கு அப்புறம் ரஜினி ஹீரோவாகவும், அப்பா வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க வந்துடுகிறார்.

வீடியோவில் 17 :52 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

அப்பா வந்து கொஞ்சம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். அப்ப கொஞ்சம் ஃபைனான்ஷியல் பிரச்சனை ஏற்பட்டது. அம்மா தான் மொத்தக் குடும்பத்தையும் பார்த்து கொண்டார்கள். பிறகு மொத்த குடும்பத்தையும் அமெரிக்கா கூட்டிட்டு போய் செட்டில் பண்ணி, எங்களை எல்லாம் பிரைவேட் ஸ்கூல்ல படிக்க வைக்க ஆரம்பித்தார்கள். அங்கு மஞ்சுளா சவுத் இந்தியன் ஹோட்டல் ஒன்று ஆரம்பித்தார்கள். அந்த ஹோட்டலில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் எல்லாம் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு உணவு பிரமாதமாக இருக்கும். எங்க அம்மா தனியாக நின்று மொத்த குடும்பத்தையும் பார்த்து கொண்டார்கள். அந்த வயதில் அந்த கஷ்டமான சூழ்நிலையில் எங்க அம்மா சாதித்தார்கள். என்னால் மறக்க முடியாது என்று கூறினார்.

Advertisement