ஷூட்டிங் அப்போ உள்ளே இருந்து வெளிய வரவே இல்ல – ஷோபாம்மா எவ்ளோவோ கூப்பிட்டாங்க – விஜய் குறித்து வனிதா.

0
3010
vanitha
- Advertisement -

சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் சீரியல், நிகழ்ச்சி என பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

மேலும், வனிதா விஜயகுமார் எப்போதும் தைரியமாக தன் கருத்துக்களை கூறுபவர். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வனிதா தன்னுடைய முதல் படமான சந்திரலேகா படத்தில் தளபதி விஜயுடன் நடித்த அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார். சந்திரலேகா படத்தில் விஜய் இஸ்லாமியராகவும், வனிதா பிராமண பெண்ணாகவும் நடித்திருந்தனர். அவர்களுக்கு இடையில் வரும் காதலைப் பற்றியது தான் சந்திரலேகா படம்.

- Advertisement -

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சில சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி வனிதா கூறியது, சந்திரலேகா படத்தில் ‘அல்லா உன் ஆணைப் படி’ என்ற பாடல் எடுக்கும் போது ஷூட்டிங்கில் விஜய் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை. விஜய்க்கு வழங்கப்பட்ட உடை பிடிக்கவில்லை. அதனால் அந்த பாடலில் நடிக்க விஜய் சூட்டிங்கிற்கு வர அவர் மறுத்தார்.

விஜய்யின் அம்மா ஷோபா அவரை வெளியில் வரும்படி கெஞ்சாத குறையாக கேட்டுக்கொண்டிருந்தார். வழக்கமாகவே அந்த காலத்தில் தனியாக காஸ்ட்டியும் டிசைனர்கள் யாரும் இல்லை. அப்போது வயது குறைவானவர்கள் என்பதால் அது எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் புரியும் என்று வனிதா தெரிவித்துள்ளார். இவர் அளித்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement