கவின் லாஸ்லியா வச்சி குக்கூ வித் கோமாளிய நடத்தி இருந்தா இப்படி தான் இருந்திருக்கும்-வனிதா பேட்டி.

0
8099
Vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிறைவடைந்தகுக்கூ கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதுவரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் விஜய் டிவியின் டிஆர்பி -யில் முதலிடத்தில் இருந்தது என்று சொன்னாலும் அதற்கு நிகரில்லை. இந்த நிகழ்ச்சியில் சமையல் தெரிந்த 8 போட்டியாளர்களும் அவர்களை தொல்லை செய்யும் 8 கோமாளிகளும் பங்கு பெற்றார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இதில் முதல் இடத்தை வனிதாவும் இரண்டாவது இடத்தை உமா ரியாசும் பிடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-
Vanitha

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா. விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் நிறைய படங்களில் இவர் நடிக்கவில்லை .பின்னர் திருமணம் செய்து கொண்டு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார். இடையில் எங்கு இருகிறார் என்று தெரியாமல் இருந்த இவருக்கு மாபெரும் ரீ-என்ட்ரி ஆக அமைந்தது, கடந்த ஆண்டு நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற வனிதாவிற்கு வத்திக்குச்சி வனிதா என்ற பட்டப் பெயரும் ஏற்பட்டது. அதற்கு முக்கிய காரணமே பிக்பாஸ் வீட்டில் இவர் காதல் ஜோடிகளுக்கு மத்தியில் கொளுத்திப் போட்ட சில விஷயங்கள் தான் காரணம் என்று சொல்லலாம்.

- Advertisement -

இருப்பினும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக சென்றதற்கு வனிதாவும் ஒரு முக்கிய காரணமாக இருந்து வந்தார். ஆனால், அதேபோல இந்த சீசனில் இளைஞர்களை மிகவும் கவர்ந்ததற்கு முக்கிய காரணமே கவின் மற்றும் லாஸ்லியாவின் ரொமான்ஸ் என்றும் சொல்லலாம். இவர்கள் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி மூலம்தான் இந்த நிகழ்ச்சி பாதி நாட்களை கடந்தது. இந்த நிலையில் குக்கூ கோமாளி பட்டத்தை வென்ற வனிதா, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார். அப்போது குவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

வீடியோவில் 5 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

பிக்பாஸ் நிகழ்ச்சி முற்றிலும் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சி அங்கே வந்த ஆட்கள் வேறு அங்கே நடந்த விஷயங்கள் வேறு. அந்த நிகழ்ச்சியையும் குக்கூ வைத்து கோமாளி நிகழ்ச்சியையும் நாம் ஒப்பிட முடியாது. ஒருவேளை அதே நிகழ்ச்சியில் வந்த கவின், லாஸ்லியா, ஷெரின், தர்ஷன் போன்றவர்களை வைத்து நீங்கள் குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி இருந்தால். அதனுடைய கெமிஸ்ட்ரி வேற மாதிரிதான் இருந்திருக்கும். கோமாளி நிகழ்ச்சியில் யாரும் பொய் சொல்ல வேண்டும் என்றோ நடிக்க வேண்டும் என்றோ,சீன் போட வேண்டும் என்றோ அவசியம் இங்கே நாம் சமையலில் மட்டும்தான் கவனம் செலுத்துவோம் என்று கூறியுள்ளார் வனித.

Advertisement