மத்தவங்கள மாதிரி மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன் – வனிதாவை வெளுத்து வாங்கிய கவின் பட தயாரிப்பாளர் ரவீந்திரன்.

0
3668
vanitha
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டும் விவாகரத்தில் முடிந்து விட்டது. அதை அடுத்து வனிதா பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது.

-விளம்பரம்-

மேலும், பீட்டரின் முதல் மனைவி எலிசபத் வட பழனி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். ஆரம்பத்தில் தனது திருமணம் குறித்து அறிவித்த போது பெரும்பாலான நபர்கள் வனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், வனிதா திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகவில்லை என்று தெரிந்ததும். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பலவிதமான விமர்சனங்கள் வந்தன . அவ்வளவு ஏன் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குட்டி பத்மினி போன்றவர்கள் கூட வனிதாவுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் வழக்கம்போல அவர்களையும் திட்டி தீர்த்து வனிதா ட்வீட் செய்து இருந்ததால் அவர்கள் இருவருமே மன்னிப்பு கேட்டு விட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் கவின் நடித்த நட்புனா என்ன தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், வனிதா மற்றும் பீட்டரின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறிய கருத்தின் சுருக்கம் என்னவென்றால் வனிதா யாரை திருமணம் செய்து கொள்கிறார் எந்த முறையில் திருமணம் செய்து கொள்கிறார் என்பது என்னுடைய கேள்வி கிடையாது. நானும் வனிதாவின் தீவிர ரசிகர் தான். ஆனால், ஒரு நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் விவாகரத்து பெறாமல் அந்த நபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்பது சட்டரீதியாக தவறு. அதை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன்.

மேலும், இந்த விஷயத்தில் நான் பீட்டரின் மனைவி எலிசபெத் பக்கம்தான் நிற்பேன் என்றும் கூறியிருந்தார் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள். இந்த இந்த வீடியோ வைரலாக பரவி வந்த நிலையில் வனிதா தயாரிப்பாளர் வேந்தர் எனக்கு போன் செய்து வெளுத்து வாங்கியுள்ளார். மேலும் தன்னை பற்றி பேச உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும், ஒழுங்கு மரியாதையாக மன்னிப்பு கேட்காவிட்டால் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று மிரட்டியதாக ரவீந்திரன் மற்றறோரு பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும், நீ எல்லாம் ஒரு ஆம்பளையா ? எதற்கு நீ சாப்பிடுகிறாய் என்றெல்லாம் ஏக வசனத்தில் பேசியிருப்பதாக ரவீந்திரன், வனிதா பேசிய சில ஆதாரங்களையும் வெளியிட்டிருக்கிறார் மேலும் தான் பேசிய கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றும் மற்றவர்களை போல தானும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன்

-விளம்பரம்-
Advertisement