உன் அம்மா இதற்கு சந்தோசபடுவாங்களா.! பிக் பாஸ் போட்டியாளரின் கணவரை வறுத்தெடுத்த வனிதா.!

0
23624
vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 3 தமிழில் போனவாரம் வனிதா விஜயகுமார் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து வனிதாவிடம் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதில் அவங்க ரத்தம் கொட்டி கொண்டு இருக்கும்போது சீன் போடுறாள். எப்படி உங்களால சொல்ல முடியுது நாளைக்கு இதே நிலைமை உங்க பொண்ணுக்கும் வந்தாள்? நீங்க மறந்துடாதீங்க என்றெல்லாம் கேட்டு வந்தனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ்ஸில் இருந்து வெளியேறிய வனிதா, ட்விட்டர் பக்கத்தில், நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த மூன்று வாரங்களிலேயே வெளியே வந்து விட்டேன் .அதற்கு பிறகு எனக்கு ஓயில் கார்டு மூலம் மக்கள் என்னை பிக் பாஸ் வீட்டில் விளையாட அனுமதி தந்தார்கள்.மேலும்,அவர்கள் தந்த ஆதரவு தான் காரணம். பொது மக்கள் மனதில் நான் இந்த அளவிற்கு இடம்பிடித்து இருக்கிறேன் என்ற ஒன்றே என்னுடைய வெற்றி என்று தன்னுடைய கருத்துக்களை தெளிவாக பதிவிட்டு சென்றார்.

இதையும் பாருங்க : கேமராவில் சிக்கிய கடிதம்.! தர்ஷனுக்காக மறைத்து மறைத்து அப்படி என்ன எழுதியுள்ளார் ஷெரின்.!

- Advertisement -

அதே போல தற்போதும் வனிதா சமூக வலைதளத்தில் பிக் பாஸ் குறித்த பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 போட்டியாளரான சுஜா வருணியின் கணவர் சிவகுமாரை, வனிதா ட்விட்டரில் வறுத்தெடுத்துள்ளார். அதில், எனக்கு உனது அம்மாவை நன்றாக தெரியும் அதேபோல உனது அப்பாவும் எனது குடும்பத்தை சார்ந்தவர் தான். நீங்கள் செய்த சில கமெண்ட்கள் குறித்து கண்டிப்பாக இறந்துபோன உங்களது தாயார் பெருமைப் பட மாட்டார். நீங்கள் என்னைப் பற்றியும் என் குழந்தைகளைப் பற்றியும் கமெண்ட் செய்துள்ளீர்கள். கொஞ்சம் மற்ற அம்மாவை குறித்து கமெண்ட் செய்வதற்கு முன்னர் பொறுப்புணர்வுடன் உணருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

Image result for suja husband

வனிதாவின் இந்த கமன்டிற்கு பதில் அளித்துள்ள சிவகுமார், மிக்க நன்றி அக்கா. நான் 24 மணி நேர நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் காண்பிக்கப்படும் நிகழ்ச்சியை பார்த்துவிட்டு என்னுடைய கருத்துக்களை கூறினேன். எனது அம்மாவை உங்களுக்கு நன்றாக தெரியும் என்பது நானறிவேன் என்னை. நினைவில் வைத்துக் கொண்டதுக்கு நன்றி. ஆனால் நான் பதிவிட்டது என்னுடைய கருத்து என்னுடைய கருத்து. நான் பதிவிட்ட கடைசி ட்வீட்டை பாருங்கள் அதில் நான் உங்களது தாய்மையைப் பற்றியும் என்னுடைய ஆதரவு குறித்தும் பதிவிட்டுள்ளேன். நான் ராபர்ட் உங்களை குறித்து பேசியதை தான் கலாய்த்திருந்தேன். உங்கள் மீது எனக்கு அதிக அன்பு இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement