கேமராவில் சிக்கிய கடிதம்.! தர்ஷனுக்காக மறைத்து மறைத்து அப்படி என்ன எழுதியுள்ளார் ஷெரின்.!

0
6243
sherin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் ஆரம்பித்த நாள் முதலே பல்வேறு காதல் கதைகள் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தர்ஷன், ஷெரின் ரொமான்ஸ்சும் ஒன்று. தர்ஷனுக்கு வெளியில் காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் ஷெரின்,, தர்ஷனிடம் நெருக்கமாக பழகி வருவதை ஒருசில போட்டியாளர்கள் காதலாக வர்ணித்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், இவர்கள் இருவரையும் வைத்து போட்டியாளர்கள் கலாய்த்து வந்தனர் . இருப்பினும் இவர்கள் இருவரும் தாங்கள் நல்ல நண்பர்களாக பழகி வருவதாக தான் கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டமஹத் மற்றும் யாஷிகா சிறப்பு விருந்தினர்களாக சென்றிருந்தனர். மேலும் , இவர்கள் உள்ளே சென்று போட்டியாளர்களுக்கு ஒரு சில டாஸ்குகளையும் கொடுத்திருந்தனர். அந்த வகையில் ஷெரின் தங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு கடிதத்தை எழுதலாம் என்றும் அந்த கடிதம் ஒளிபரப்ப படாது என்றும் அவர்கள் அறிவித்தனர்.

இதையும் பாருங்க : பிக் பாஸில் இருந்து வெளியேறிய பின்னர் சேரன் போட்ட முதல் பதிவு.!

இதனால் ஷெரின் தனது படுக்கை அறைக்கு சென்று தனியாக அமர்ந்து கடிதத்தை எழுதிக் கொண்டிருந்தார். அந்த கடிதத்தை கேமராவுக்கு தெரியாத வண்ணம் மறைத்து மறைத்து எழுதி வைத்திருந்தார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து ஷெரீன் எழுதிய கடிதத்தை படித்து காண்பிக்கும்படி பிக்பாஸ் கூறியிருந்தார். இதனால் பதறிப்போன ஷெரின் வேக வேகமாக சென்று அந்த கடிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டார்.

-விளம்பரம்-

ஷெரின் தர்ஷனுக்கு தான் கடிதம் எழுதினார் என்பது அனைவரும் அறிந்த நிலையில் தர்ஷன் குப்பைத்தொட்டியை கூட கிளறி பார்த்து அந்த கடிதத்தில் என்ன இருப்பது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தார். இருப்பினும் அவருக்கு பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை. எந்த நிலையில் ஷெரின், தர்ஷனுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு சில வரிகள் கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் ‘நீதான் என்னுடைய மேகத்தில் இருக்கும் சூரிய ஒளி. உன்னிடம் எனக்கு சொல்ல நிறைய உள்ளது. இருளில் இருந்த என்னுடைய வாழ்க்கையை நீ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளாய். ஆனால், நீ இன்னமும் குருடனாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்’ என்று எழுதி இருக்கிறார். இதன் மூலம் மீது தனக்கு இருக்கும் அன்பினையும் காதலையும் வெளிக்காட்டியுள்ளார் ஷெரின்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement