இந்த நடிகைய பிக் பாஸ் 4 க்கு அனுப்புங்க – சிபாரிசு செய்த வனிதாவின் பேட்டி.

0
1838
vanithabala
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது மே, ஜூன் மாதம் வரப்போவதால் சீசன் 4க்கான டைம் வந்து விட்டது. இந்நேரத்துக்கு பிக் பாஸ் போட்டியாளர்களை எல்லாம் தேர்வு செய்திருப்பார்கள். ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த சீசனில் யார் யார் எல்லாம் பங்குபெற போகிறார்கள் என்று அடிக்கடி சமூக வலைதளத்தில் சில பெயர்கள் அடிபடுகிறது.

வீடியோவில் 9 : 20 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதாவிடம் பிக் பாஸ் 4 நிகழ்ச்சி குறித்தும், அதில் போட்டியாளராக யார் போக போகிறார்கள் என்பது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வனிதா, தற்போது உள்ள நிலைமையில் பிக் பாஸ் ஆரம்பிக்கபடுமா என்பது தெரியவில்லை. ஆனால், இந்த சீசனில் நடிகை அம்பிகா போனால் மிகவும் நன்றாக இருக்கும், காரணம் அவர் மிகவும் தைரியமான ஒரு ஆள். படத்தில் பார்க்கும் அம்பிகா வேறு நிஜ அம்பிகா வேறு என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : இவளுக்கு பெரிய நயன்தாரானு நினைப்பு?னு சொன்னாங்க. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா.

- Advertisement -

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோமாளிகளில் சிலர் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற செய்தி குறித்து பேசிய வனிதா. உண்மையில் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற கோமாளிகளை மட்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பினால் நன்றாக இருக்கும். குறிப்பாக புகழ், பாலா, சிவிங்கி போன்றவர்களை அனுப்பினால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கருத்து என்று கூறியுள்ளார் வனிதா.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வனிதாவுக்கு ஏகப்பட்ட பிரபலம் ஏற்பட்டது. மேலும், வனிதாவின் மவ்ஸை அறிந்த விஜய் டிவி, வனிதாவை அப்படியே தக்க வைத்துக்கொண்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வனிதா கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியை கூட சமூக இடைவெளியோடு எப்படி நடத்தலாம் என்பதை கலக்கப்போவது யாரு வாட்ஸ் அப் குழுவில் பேச்சு வார்த்தைகள் போய்க்கொண்டு இருப்பதாக வனிதா கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement