இவளுக்கு பெரிய நயன்தாரானு நினைப்பு?னு சொன்னாங்க. பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா.

0
3223
vjchitra
- Advertisement -

தொலைக்காட்சிகள் அனைத்தும் மாறி மாறி எத்தனையோ சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் ஒரு சில சீரியல்கள் மட்டும் தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் விஜய் காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குடும்ப ரசிகர்கள் மட்டுமல்லாது இளசுகளையும் கவர்ந்துள்ளது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடரில் மூன்று அண்ணன் தம்பி தம்பதியர்கள் நடித்தாலும் இந்த தொடரில் மூன்றாவது ஜோடியாக வருபவர் தான் கதிர்– முல்லை. இவர்களுடைய ரொமான்ஸ், கெமிஸ்ட்ரியும் வேற லெவல் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-
Chithu VJ : Oor Sutralam Vanga Shooting Spot Pics Collection 1

நடிகை சித்ரா அவர்கள் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். பின்னர் படிப்படியாக சீரியலில் நடிக்கத் தொடங்கினார். முதலில் இவர் விஜே வாக தான் அறிமுகமானார். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன்முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினியாக இருந்தார்.இந்த நிலையில் தொகுப்பாளினியாக இருந்த போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் சித்ரா.

- Advertisement -

அதில், எல்லோரையும் எப்போதும் திட்டிகொண்டே இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். நான் சைக்காலஜி படித்திருக்கிறேன் என்பதால் , இதையெல்லாம் சுலபமாக கடந்து போய் விடுவேன். ஆங்கரிங் வந்த புதுசுல, லைவ் வரும் போது `இவளுக்கு மனசுல பெரிய நயன்தாரானு நினைப்பு’னு கமென்ட் அடிப்பாங்க. அதைப் பார்த்து எரிச்சலடைய கூடாது. எதிர்மறைக் கருத்துகளை கடந்து போக பழகிட்டா பிரச்னை இல்லை. அவங்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தால் நம் நேரமும் எனர்ஜியும் தான் வேஸ்ட் என்று கூறியுள்ளார் சித்ரா.

 சித்ரா

மேலும், லாக்டவுனில் என்ன செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறிய சித்ரா, முதல் ரெண்டு நாள்கள் வாட்ஸ்அப், இன்ஸ்டா, ஃபேஸ்புக்னுதான் இருந்தேன். பிறகு, இந்த நாள்களைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்று நினைத்து வீட்டைச் சுத்தம் செய்வது ,சமைப்பது , தோட்ட வேலைன்னு இறங்கிட்டேன். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருக்கும் அக்கா பசங்களுக்கு டான்ஸும் யோகாவும் சொல்லித்தருகிறேன் என்று கூறியுள்ளார் சித்ரா.

-விளம்பரம்-
Advertisement