பன்றிக்கறி சாப்பிடும் கமலா ஹாரிஸ் – வீடியோவை பகிர்ந்த பிரபலம். வனிதா கொடுத்த பதிலடி.

0
1590
vanitha
- Advertisement -

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கபட்டிருக்கும் கமலா ஹாரிஸ் தான் கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் தமிழராக இருந்து வருகிறார். கமலா ஹரிஷ் தமிழகத்துக்கு நெருங்கிய தொடர்பு கொண்டவர், கமலா ஹரிஷ்-யின் தாத்தா டிவி கோபாலன் சுதந்திர போராட்ட தியாகி, அவரது பாட்டி இராஜம் பெண்கள் உரிமைக்காகப் போராடியவர். கமலாவின் தாயார் பெயர் ஷியாமலா இவர் 19 வயது வரை சென்னையில் தான் படித்தார்.

-விளம்பரம்-

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட இவர் அமெரிக்காவின் மிகப் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் இருந்து செனட்டராக ஆக தேர்வு செய்யப்பட்டவர்.  கடந்த 2011ம் ஆண்டு முதல் முறையாக கலிபோர்னியாவில் செனட்டராக பதவி ஏற்றார். கமலா ஹரிஷ்ஷின் தாய் சியாமளா கோபாலன் சென்னையை சேர்ந்தவர். இதன் மூலமாக கமலா தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்று தெரிகிறது.

- Advertisement -

மேலும் சமூக வளைதளத்தில் கமலா ஹாரிஸ் சென்னை பெசன்ட் நகர் சேர்ந்தவர் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் ஒரு சிலரோ கமலா ஹரிஷ், தான் ஒரு இந்தியர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்றும் கூறி வருகிறார்கள். ஆனால், உண்மையில் கமலா ஹாரிஸ் தன்னை ஆப்ரிக்க அமெரிக்கன் என்றுதான் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த விவாதங்கள் சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளர் விளையாட்டு வர்ணனையாளருமான சுமந்த் ராமன், கமலா ஹாரிஸ் பன்றி கறி சாப்பிடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, பெசன்ட்நகர் மாமா மற்றும் மாமிகள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு இப்போது என்ன செய்வார்கள். மயிலாப்பூரில் இருப்பவர்கள் கூட தற்போது கமலா ஹாரிஸை சொந்தம் கொண்டாட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

சுமந்த் ராமனின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள வனிதா, இது அவரவர் வாழ்க்கை என்ன சாப்பிட வேண்டும் என்ன உடுத்த வேண்டும் என்பது அவரவரின் விருப்பம். இது மிகவும் கேவலமான புத்தி என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், ரசிகர் ஒருவர் வனிதாவின் டீவீட்டுக்கு பதிலளித்து, அவர் பன்றி கறி சாப்பிடுவது பிரச்சினை கிடையாது. தமிழ் பிராமணர்கள் அசைவம் சாப்பிட்டால் அவர்களை ஒதுக்கி விடுவார்கள். ஆனால், இந்த வீடியோவை பார்த்துவிட்டு அவர்கள் என்ன சொல்வார்கள் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலளித்த வனிதா நான் படித்த பள்ளியில் அசைவம் சாப்பிடும் பல்வேறு தமிழ் பிராமணர்கள் எனக்கு தெரியும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement