என் கூட லைப் லாங் வரது எல்லாம் என் ஜாதகத்திலேயே இல்ல – வனிதாவின் தத்துவம்.

0
1030
vanitha

பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார்.வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள்.

திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகினார். இவருக்கு ரீ- என்ட்ரி கொடுத்தது விஜய் டிவி தான். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமடைந்த வனிதா பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்சகளில் பங்கேற்றார். அந்த வகையில் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்ரவர்த்தி இணைந்துள்ளார். இன்று வெளியான நிகழ்ச்சியில் பேசிய வனிதா, சுரேஷ் சக்கரவர்த்தியை மிகவும் சமரசம் செய்து அழைத்து வந்ததாக கூறினார். மேலும், கடைசி வரை என் கூட வரது என்பது என் ஜாதகத்திலேயே இல்லை, இருந்தாலும் இந்த நிகழ்ச்சியில் கடைசி வரை என் கூட வாங்க என்று கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வட இந்தியர் ஒருவருடன் தனது நான்காம் திருமணத்தை முடித்துவிட்டதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியானது. மேலும், அவர் ஒரு பைலட் என்றும் 3மாதத்திற்கு ஒரு முறை தான் வனிதாவை வந்து சந்தித்து வருகிறார் என்றும் கூறப்பட்டது.இதனை மறுத்துள்ள வனிதா, என்னைப் பற்றி சினிமா விகடன் தளத்தில் வெளியான செய்தி முழுக்க முழுக்க பொய்யானது. அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பதோடு அப்படி ஒரு நபர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

Advertisement