கவினை முதுகுக்கு பின்னால் கிண்டலடித்த வனிதா.! வச்சிருக்க பட்டப்பெயர பாருங்க.!

0
1233
Vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. காதல், சண்டை, ஈகோ என்று போட்டியாளர்கள் மத்தியில் தற்போது கிளம்பியுள்ளது. இதில் கவின் மற்றும் அபிராமி காதல் ஒரு புறம் இருக்க மீரா மிதுனை சக போட்டியாளர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் கவினிடன், அபிராமி காதலை தெரிவித்ததும் ஹெய் லைட்டாக அமைந்திருந்த்திருந்தது.

நேற்றைய நிகழ்ச்சியில் கவின் மேல் இருக்கும் காதலை, கவினிடம் இன்று நேரடியாக சொன்னார் அபிராமி. அப்போது இங்கு இருக்கும் அனைவர்க்கும் உன் மீது நான் காதல் வைத்துள்ளது தெரியும் உனக்கு மட்டும் அது புரியவில்லையா என்று அபிராமி கேட்க, அதற்கு ஒன்றும் புரியாதது போல சிறிது நேரம் பாவலா செய்தார் கவின்.

இதையும் பாருங்க : மீரா மிதுனின் உண்மை முகம் தெரிந்தால் சாக்ஷி, அபிராமி செய்தது சரிதான்னு நீங்களே சொல்வீங்க.! 

- Advertisement -

இதனால் கோபமடைந்த அபிராமி அந்த இடத்தை விட்டு சென்று விடுகிறார். பின்னர் அவரை பின் தொடர்ந்து சமாதானம் செய்து முயற்சிசெய்தார் கவின். அதன் பின்னர் பெட் ரூமில் கவனை பற்றி சீரியஸான ஒரு டிஸ்கஷன் ஓடியது. அப்போது நடுவே வந்த வனிதா, எனக்கு தெரியாமல் ஒரு லவ் டிராக் போய்கிட்டு இருக்கா யார் அது என்று கேட்டார்.

அதற்கு சாக்ஷி, வணிதாவிடம் ‘நீங்களே யாருன்னு சொல்லுங்க’ என்றதும் அதற்கு வனிதா ‘அந்த புட்டி தான ‘ என்று செய்கையுடன் நக்கலடித்தார். மேலும், அவன் சும்மா ஜோக் பண்ணிட்டு இருக்கான் அவன் சீரியஸ் எல்லாம் கிடையாது என்றதும் அபிராமி, எனக்கு அவன் மீது கிரஸ் இருப்பது உண்மை தான் என்று கூற அதற்கு வனிதாவோ அப்போ நீ மட்டும் அதனை நினைத்து சந்தோசபட்டுக்கோ என்று கிண்டலடித்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி பொறுத்த வரை சொர்ணாக்கா கதாபாத்திரத்தில் ஒருவர் கண்டிப்பாக இடம் பெற்று இருப்பார்கள். அந்த வகையில் வனிதா தான் இந்த சீஸனின் காயத்ரி ரகுராம் என்று ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் கூடிய விரைவில் நிறைய பஞ்சாயத்துக்கள் இருக்கும் என்பதில் மட்டும் பஞ்சமில்லை என்பது மட்டும் உறுதி.

Advertisement