‘நடிகை, குக், ஜட்ஜ்’ இப்போ விமர்சகராக அவதாரம் எடுத்த வனிதா. பொன்மகள் வந்தாள் பற்றி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
130498
Vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகென் முதலிடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான வனிதாவும் ஒருவர். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.

-விளம்பரம்-

சமீப காலமாக இவரை மக்கள் மறந்திருந்த நிலையில் கடந்த ஆண்டு பிக் பாஸில் கலந்து கொண்டு மீண்டும் பிரபலமானார். பிக் பாஸில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து வந்தார் வனிதா. சொல்லபோன்னால் தான் வனிதாவால் தான் trp எகிறியது. இதனால் வனிதாவை தக்க வைத்துக்கொண்ட விஜய் டிவி வனிதாவை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வைத்தார்கள்.

- Advertisement -

பிக் பாஸ், குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, யூடியூபில் சமையல் நிகழ்ச்சிகள் என்று அசத்தி வந்த வனிதா தற்போது விமர்சகராகவும் அவதாரமெடுத்துள்ளார். அதுவும் இவர் ஜோதிகா நடிப்பில் வெளியாகியுள்ள ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படத்தை விமர்சனம் செய்துள்ள வீடியோ பலரையும் கொஞ்சம் அப்சட் அடைய வைத்துள்ளது.

வெளியாவதற்கு முன்பாகவே இந்த திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. இருப்பினும் வெற்றிகரமாக இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த படம். ஆனால், இந்த படத்திற்கு வனிதா சொன்ன விமர்சனம் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரண்டு மூன்று படத்தில் மட்டும் நடித்த வனிதா, ஜோதிகாவின் படத்தை விமர்சனம் செய்வதா என்று ரசிகர்கள் பலரும் வனிதாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் கேட்ட பெயரை எடுத்த வனிதா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் நல்ல பெயரை எடுத்தார். அதிலும் தர்ஷன் சனம் ஷெட்டி விஷயத்தில் இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது சொன்ன விஷயங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பலருக்கும் தெரியவந்ததால் இவரை பலரும் பாராட்டனர். ஆனால், தற்போது இந்த விமர்சத்தினால் வனிதா மீண்டும் தனது பெயரை டேமேஜ் செய்துகொள்கிறார் என்பது போல தான் தெரிகிறது.

Advertisement