சேத்துல விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல – வனிதா செய்த அநாகரீக செயல் பற்றி சொன்ன நகுல். வைரல் வீடியோ.

0
79492
nakhul
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் வனிதா . இதில் இவருக்கு ஜோடியாக சுரேஷ் சக்ரவர்த்தி பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து விள்குவதாக அறிவித்து இருந்தார் வனிதா. இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட வனிதா, அதில், ஒரு பெண் தான் இன்னோரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் , அவர்களை வயதில் மூத்தவர்கள் வென்று விடுவார்கள் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-216.jpg

அவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து விட்டார்கள் என்று கூறி இருந்தார். வனிதா சீனியர் நடிகை என்று சொன்னது ரம்யா கிருஷ்ணனை தான் என்பது பலருக்கும் தெரியும்.ஆனால், ரம்யா கிருஷ்ணனிடம் இது குறித்து கேட்கப்பட்ட போது நோ கமெண்ட்ஸ் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டார். இந்த எபிசோடுக்காதான் பலரும் காத்துகொண்டு இருந்தனர்.

இதையும் பாருங்க : இதான் BlanketChallenge-ஆ வெறும் பெட்ஷீட்டை சுற்றிக்கொண்டு சமீரா ரெட்டி கொடுத்துள்ள போஸ்.

- Advertisement -

மேலும், இந்த எபிசொட் ஒளிபரப்பான பின்னர் வனிதாவை தான் பலரும் குறை சொன்னார்கள்.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நகுல் இந்த பிரச்சனை குறித்து பேசுகையில், வனிதாவிற்கு மற்றவர்களுடன் நாங்கள் ஒப்பிட்டது பிடிக்கவில்லை. நங்கள் மற்றவர்கள் எப்படி ஆடுகிறார்கள் அதை வைத்து தான் அவர்களுக்கு கமன்ட் சொன்னோம்.ஆனால், அவர் அதை தவறாக புரிந்துகொண்டார்.

நாங்கள் மிகவும் தன்மையாக தான் சொன்னோம். ஆனால், வனிதா எங்களை ஒரு அசிங்கமான பெயரை சொல்லி திட்டியுள்ளார் என்று செட்டில் இருந்தவர்கள் சொன்னார்கள். என்னை விடுங்கள் ரம்யா மேடம் எவ்ளோ பெரிய ஆளு. அவர்களை இப்படி பேசலாமா. ரம்யா மேம்மிடம் வனிதா மன்னிப்பு கேக்கணும். இதெல்லாம் அவருக்கு புதுசு இல்லை. அவங்களை பத்தி நான் பேச கூட விரும்பல. யாரும் சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல. அம்மன் கெட்டப்பில் இருந்து இப்படி பச்சையா பேசி இருக்காங்க என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement