குவியும் பட வாய்ப்புகள், கொட்டும் பணம் – சென்னையில் இப்படி ஒரு கடயை திறந்துள்ள வனிதா.

0
1013
vanitha
- Advertisement -

நடிகை வனிதா விஜயகுமார் பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். மேலும், சில வருடங்களாகவே சோசியல் மீடியாவில் வனிதாவை பற்றிய செய்திகள் தான் அதிகம் வருகின்றன.

-விளம்பரம்-

அதுவும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதிலிருந்தே இவரைக் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்து வண்ணம் உள்ளன. அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. மேலும், இவர் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் ஏற்பட்டது இதை தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் ஆனால் அப்போதும் இவர் ஒரு சர்ச்சைக்குரிய பிரபலமாக திகழ்ந்து வந்தார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார் ஆனால் இவருக்கும் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பின்னர் இவர் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியில் விட்டு விலகி இருந்தார் ஆனாலும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

வனிதா விஜயகுமார் வெறும் நடிகையாக மட்டுமல்லாமல் சமையலிலும் கைதேர்ந்தவள் தான் அதே போல இவர். மேலும், இவர் ஆடை அலங்காரம் மற்றும் மேக்கப்புகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்படி ஒரு நிலையில் இவர் சென்னையில் புதிய கடை ஒன்றை ஆரம்பித்து உள்ளார். அதில் ஆடை மற்றும் மேக் கப் போன்ற விஷயங்களை மக்களுக்கு கொண்டு செல்ல இருக்கிறாராம் வனிதா.

-விளம்பரம்-
Advertisement