வனிதாவுக்கு மூன்றாம் திருமணம். என்னிக்கு தெரியுமா ? திருமண பத்திரிகை இதோ.

0
4750
vanitha
- Advertisement -

நடிகையும் பிக் பாஸ் சீசன் 3யின் போட்டியாளரான வனிதாவுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்த நிலையில் வனிதாவுக்கு மூன்றாவது திருமணம் நடைபெற இருப்பதாக வெளியான செய்தி தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மஞ்சுளாவின் மகளான வனிதா விஜய்யின் சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஓரிரு படங்களில் நடித்த வனிதா கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கி இருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்ட வனிதா பிக் பாஸ் வீட்டில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வந்தார் வனிதா. இந்த நிலையில் வனிதாவிற்கு பீட்டர் பவுல்என்பவருடன் வரும் ஜூன் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இது வனிதாவின் மூன்றாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இரண்டு விவாகரத்திற்கு பின்னர் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார் வனிதா. மேலும் ராபர்ட் நடித்த எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தையும் இருந்தார் வனிதா. அதன் பின்னர் நடந்த 2018 ஆம் ஆண்டு ராபர்ட்டிற்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாகவும். ஆனால், அவருக்கு விவாகரத்து கிடைக்காததால் எங்கள் திருமணம் நடக்கவில்லை என்றும் வனிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது திருமணத்தை செய்யவிருக்கிறார் வனிதா. கொரோனா பிரச்சனை காரணமாக இவரது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வனிதாவின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் என்ற பீட்டர் பவுலை பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை விரைவில் அதுகுறித்து அவர் செய்கிறோம்

-விளம்பரம்-
Advertisement