இப்படி ஒரு நேரத்தில் ஷாப்பிங் சென்றுள்ள வனிதா. அதுவும் எதுக்குன்னு நீங்களே பாருங்க.

0
74779
vanithashopping
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகென் முதலிடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான வனிதாவும் ஒருவர். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.

-விளம்பரம்-

இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பதாகவே வனிதாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது. மேலும், விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் தங்கி வனிதாவை வனிதாவை போலீசார் காலி செய்ய முயன்றார்கள்.

- Advertisement -

அப்போது நடுரோட்டில் நின்று கொண்டு போலீசார்கள் இடமே வனிதா நைட்டியை மடித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனால் வனிதா என்றாலே மிகவும் சர்ச்சையான பேர்வழிதான் என்ற ஒரு தோற்றம் வனிதாவிற்கு உருவானது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வனிதா. பிக் பாஸில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து வந்தார் வனிதா.

சொல்லபோன்னால் தான் வனிதாவால் தான் trp எகிறியது. இதனால் வனிதாவை தக்க வைத்துக்கொண்ட விஜய் டிவி வனிதாவை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வைத்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியிலும் வனிதா ஆதிக்கத்தை செலுத்தி முதல் இடத்தை பிடித்தார். இந்த நிகழ்ச்சியில் வனிதா செஞ்ச ரெசிபிக்களை வேற லெவல். இந்த நிலையில் வனிதா புதிய சேனல் ஒன்றை ஆரபித்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த சேனலின் சமையல் நிகழ்ச்சிகளுக்காக சில பொருட்டாக்களை வாங்க வனிதா ஷாப்பிங் சென்றுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வனிதா வீட்டில் வேலைக்கார ஆள் இல்லை என்பதால் நானே வெளியில் செல்ல வேண்டியதாக ஆகிவிட்டது. மேலும், பாதுகாப்பாக தான் வெளியில் வந்துள்ளேன் என்று பதிவிட்டிருந்தார்.

This image has an empty alt attribute; its file name is image-42.png

இதனை கண்ட ரசிகர் ஒருவர், உங்கள் சமையல் நிகழ்ச்சிக்காக ஷாப்பிங் செய்வது ஒன்றும் அடிப்படை தேவை கிடையாது இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்த வீட்டுக்குள்ளேயே இருந்தால் மட்டுமே வெளியே வாருங்கள் மக்களே என்று பதிவிட்டிருந்தார் இதற்கு பதில் அளித்த வனிதா நன்றி தம்பி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், மற்றவர்களோ வனிதாவின் சமையலுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர்.

Advertisement