அருண் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன வனிதா. அசிங்கபடுத்திய அருண் விஜய்.

0
338337
Vanitha-arunvijay
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில்இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. அதற்கு முக்கிய காரணமே இந்த சீசனில் நடந்தேறிய பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் தான். அதற்கு முழு முதல் காரணமாக இருந்து வந்தார் நடிகை வனிதா. விஜய்யின் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமான வனிதா தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மூத்த மகள் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

-விளம்பரம்-

வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.சமீபத்தில் அருண் விஜய் தனது சகோதரிகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால், அதில் வனிதா இல்லாததை கண்டு வணிதாவிற்காக ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர்.

இதையும் பாருங்க : நயன் பிறந்தநாளுக்கு ஆதரவற்றோர்களுக்கு உதவி செய்த விக்னேஷ் சிவன். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

இந்த நிலையில் அருண் விஜய் இன்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி காலை முதல் அவரது ரசிகர்கள் #HappyBirthdayArunVijay, #HBDArunVijay என்ற ஹேஷ்டேக் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு மாஃபியா படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டனர். இதனால் அருண் விஜய் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்த நிலையில் அருண் விஜய்க்கு அவரது சகோதரியான வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், கருத்து வேறுபாடுகளை சில சமயங்களில் தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரே ரத்தம். நீங்களும், நானும் ஒன்றாகத் தான் நமது வாழ்க்கையைத் தொடங்கினோம். நமது குடும்பத்தை நாம் பெருமையடைச் செய்ய வேண்டும். நமக்குள் இருக்கும் ஒற்றுமை தான் நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ ஐ லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். ஆனால், இதற்கு அருண் விஜய் ஒரு ரியாக்ஷனையும் கொடுக்கவில்லை. ஆனால், தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதனால் வனிதாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
https://twitter.com/arunarun0707/status/1196648315539996672

என்னதான் அருண் விஜய், வனிதாவை ஒதுக்கினாலும் அருண் விஜய் பிறந்தநாளுக்கு வனிதா வாழ்த்து தெரிவித்துள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே பேட்டி ஒன்றில் பேசி இருந்த வனிதா. எனக்கு யார் என்றே தெரியாத பல ரசிகர்கள் என்னுடைய உணர்வை புரிந்து கொண்டு அதனை மதிக்கின்றார்கள். ஆனால், என்னுடைய உடன் பிறந்தவர்களுக்கு இது தெரியவில்லை என்பது தான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement