வனிதா மகளுக்கு விஷேஷம். சிம்பிளாக நடந்து முடிந்த நிகழ்ச்சி. குவியும் வாழ்த்துக்கள்.

0
1381
vanitha

வனிதா மற்றும் பீட்டர் பவுல் விஷயத்தில் எண்ணற்ற பிரச்சனைகள் வெடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான். ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இதனிடையே வனிதா பீட்டர் பவுலுடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி பீட்டர் அவருடன் இணைந்து புகைப்படத்தை போடுவது, ஒன்றாக ஊர் சுற்றுவது, பேட்டி கொடுப்பது என்று மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த வனிதாவிற்கு பீட்டர் பால் ஒரு பேரிடி கொடுத்திருந்தார்.

சமீபத்தில் பீட்டர் பவுல் பிரிந்துவிட்டதாக நடிகை வனிதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். வனிதா பீட்டர் பவுலை முறையாக திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாகவே அவருடன் வெளியில் செல்வது, குடும்பத்தோடு இணைத்துக்கொண்டது என்று மட்டுமல்லாமல் வீட்டில் எளிமையாக திருமணத்தை நடத்தி அதற்கு பெயர் லவ் செலப்பெரேஷன் என்று கூறி இருந்தார். வனிதா முதலில் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகளை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ். அதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராஜன் ஆனந்தன் திருமணம் செய்து கொண்ட பின்னர் இந்த தம்பதியருக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறந்தார்.ராஜன் ஆனந்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த வனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

மேலும், விவாகரத்து பின்னர் ஜெயனிதா, சில ஆண்டுகள் ஆனந்த் ராஜனுடன் தான் இருந்து வந்தார். ஆனால், வனிதா,பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தனது மகளை கடத்தி வந்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார் ஆனந்த் ராஜன். ஆனாலும், தற்போது வனிதாவுடன் தான் ஜெயனிதா வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஜெயனிதா வயதுக்கு வந்துள்ளார். இதனால் வீட்டிலேயே சிம்புளாக கொண்டாடியுள்ளார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement