தனது அம்மாவின் மூன்றாவது திருமணம் குறித்து மகள் சொன்ன கருத்து.

0
5799
- Advertisement -

பிக் பாஸ் புகழ் வனிதாவுக்கு மூன்றாவது திருமணம், இந்த செய்தி தான் கடந்த சில தினங்களாக பிக் பாஸ் ரசிகர்களிடையே வைரலான செய்தியாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருடன் வரும் 27 ஆம் தேதி திருமணம் என்று திருமண பத்திரிகை ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. அந்த பத்திரிகை வெளியான அடுத்த நாளே வனிதா தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட வனிதா, என்னுடைய வாழ்க்கையில் அவர் ஒரு நண்பராக நுழைந்து என்னுடைய யூடியூப் சேனலுக்கு நிறைய உதவிகளை செய்தார். இதனால் என்னை அக்கறையாக கவனித்துக் கொண்டது போல உணர்ந்தேன். உங்கள் அனைவருக்கும் தெரியும் என்னுடைய பிள்ளைகள் தான் எனக்கு முக்கியம் என்று அவரிடம் இதற்கு என்னுடைய குழந்தைகள் சம்பாதிக்க வேண்டும் என்று கூறினேன். திருமணம் குறித்து என்னிடம் அவர் பேசியபோது என் மனதுக்குள் ஆம் என்றுதான் தோன்றியது. அதேபோல என் பிள்ளைகளிடம் அவர் பேசியபோது அவர்களும் இதற்கு சம்மதித்து விட்டார்கள்.

- Advertisement -

பீட்டர் போல் யார் என்று கேட்பவர்களுக்கு. அவர் ஒரு திரைப்பட இயக்குனர். அன்பானவர்,அக்கறை ஆனவர் மற்றும் என் மனதை திருடிய நேர்மையான மனிதர் மற்ற அனைத்தும் நீங்கள் கூடிய விரைவில் தெரிவித்துக் கொள்வீர்கள். எங்களது திருமணம் அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப நடைபெறும். மேலும், இந்த திருமணத்தில் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்வார்கள் திருமணத்திற்குப் பின்னர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் நான் வெளியிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

I'm counting my blessings

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

வனிதாவின் இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த நிலையில் வனிதாவின் மகளான ஜோவிகா, வனிதாவின் திருமணம் குறித்து கமன்ட் செய்திருந்தார். அதில், உங்கள் மீது நான் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன். உங்களிடம் இருந்து அனைத்தையும் நான் கற்றுக்கொண்டேன். இந்த பதினைந்து வருட வாழ்க்கையில் உங்களுடன் கடினமான தருணத்தை நான் பார்த்திருக்கிறேன். இன்னமும் அதுபோன்ற தருணங்கள் வரப்போகிறது. நீங்கள் மிகவும் இரக்க குணமும் அன்பையும் கொண்ட ஒரு நபர் உங்களுக்கு பிடித்த வாழ்க்கையை நீங்கள் வாழ்கிறீர்கள்.

-விளம்பரம்-

அதில் எந்த தவறும் இல்லை. அதற்கு நான் 10000% சதவீதம் துணையாக இருப்பேன். யார் என்ன சொன்னாலும் சரி உங்களை பத்தி எனக்கு தெரியும். உங்களின் கடின உழைப்பு,கண்ணியம், அன்பு அனைத்தையும் நீங்கள் மறந்து விடாதீர்கள். மற்றவர்களைப் போல நீங்களும் மகிழ்ச்சியான வாழ்கைகைக்கு தகுதியானவர் தான். அனைவரும் மேஜிக் என்பதில் நம்பிக்கை கிடையாது. மேலும், யாரும் அன்பையும் நம்ப மாட்டார்கள். ஆனால் இதை இரண்டையும் நீங்கள் நம்பியதால் அது உங்களுக்கு திருப்பி கொடுத்துள்ளது. நான் இதை உங்களின் மகளாக மட்டும் சொல்லவில்லை உங்களின் ஒரு நண்பனாகவும் கூறுகிறேன். என்றும் உங்களை நேசிக்கும் மகன் வாழ்த்துக்கள் அம்மா

Advertisement