உங்களுக்கு ஒரு பொண்ணு இருந்தா எவ்ளோ பீல் பண்ணுவீங்க – ராபர்ட் மாஸ்டர் பேட்டி.

0
118149
vanitha

கடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டும் விவாகரத்தில் முடிந்து விட்டது. வனிதாவிற்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனியாக வாழ்ந்து வந்த வனிதா, சமீபத்தில் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், இது முறைப்படி திருமணம் இல்லை காதலின் கொண்டாட்டமா என்பதை தெளிவாக கூறாமல் வனிதா ரசிகர்களை குழப்பி கொண்டுதான் வருகிறார். அதற்கு காரணம் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது. வனிதா பீட்டர் பவுலை திருமணம் செய்வதற்கு முன்பாக, அதாவது சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார்.

- Advertisement -

இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது. இந்தநிலையில் ராபர்ட் மாஸ்டர் வனிதாவின் மூன்றாவது திருமண செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், மேலும் வனிதாவை திட்டியதாகவும் வீடியோ ஒன்று வெளியானது. ஆனால் இப்படி ஒரு பேட்டியை நான் எந்த ஊடகத்திற்கும் அளிக்கவில்லை என்றும் வனிதாவின் திருமணம் குறித்து தான் எந்தவித கருத்தையும் சொல்லவில்லை என்றும் ராபர்ட் மாஸ்டர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர் என்னுடைய மகள் தான் என்னை பற்றியும் வனிதா பற்றியும் சமீபத்தில் வெளியான அந்த வீடியோவை எனக்கு வந்து காட்டினால். உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறார் அவர் இதுபோன்ற ஒரு வீடியோவை உங்களுக்கு காட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும். வனிதாவின் திருமணம் குறித்து நான் எந்த கருத்தையும் சொல்லவில்லை. அதேபோல இது வனிதாவின் தனிப்பட்ட விஷயம். ஆனால் இதனை மக்களுக்கு தெரியும் வகையில் யூடியூபில் அறிவித்து விட்டுதான் திருமணம் செய்து கொண்டார். எனவே, மக்களின் கேள்விகளுக்கு எல்லாம் வனிதா பதில் சொல்ல வேண்டும். மேலும், வனிதா பீட்டர் பவுலிடம் ஏமாற்றிவிட்டார் என்று கூறுகிறார்கள். அவர் அப்படிப்பட்ட ஆள் கிடையாது அவரை யாராலும் ஏமாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார் ராபர்ட் மாஸ்டர்

-விளம்பரம்-
Advertisement