ராபர்ட் மாஸ்டர் வீட்டில் கைவரிசையை காட்டிய பொடியன்கள் – CCTV வீடியோவை வெளியிட்ட ராபர்ட் மாஸ்டர்.

0
703
robert
- Advertisement -

வனிதாவின் திருமண விவகாரம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் பெயரும் அடிபட்டது நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு விஷயம் வைரலாக பேசப்பட்டு வந்தது.

-விளம்பரம்-
robert

அதற்கு ஏற்றார்போல ராபர்ட் மாபெரும் வனிதாவின் பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டிருந்தார் ஆனால் இந்த விஷயம் குறித்து மறுப்பு தெரிவித்து வந்த ராபர்ட் மாஸ்டர், தன்னை ஹீரோவாக்கியதால்தான் அதற்கு நன்றிக்கடனாக அவர் மீது உள்ள அன்பில் அவரது பெயரை பச்சை குத்தியதாகவும் தனக்கும் வனிதாவிற்கும் எந்தவித காதலும் இல்லை என்றும் மறுப்பு தெரிவித்து இருந்தார் ராபர்ட் மாஸ்டர்.

- Advertisement -

இந்தநிலையில் ராபர்ட் மாஸ்டர் வீட்டில் இரண்டு சிறுவர்கள் திருட்டு வேலையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சியை ராபர்ட் மாஸ்டர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் இரண்டு சிறுவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பின்னர் சாலையில் யாராவது இருக்கிறார்களா என்று நோட்டமிடுகின்றனர். பின்னர் அதில் ஒரு சிறுவன் மட்டும் வெளியே நிற்க இன்னொரு சிறுவன் ராபர்ட் மாஸ்டர் வீட்டின் கதவை திறந்து உள்ளே நுழைகிறான்.

பின்னர் சிறிது நேரம் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு அங்கே இருக்கும் சைக்கிள் ஒன்றை எடுத்துக்கொண்டு அவனே அந்த சைக்கிளை ஓட்டிச் சென்றுவிடுகிறான். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. திருட்டு வேலையில் ஈடுகட்ட சிறுவர்கள் மீது ராபர்ட் மாஸ்டர் போலீசில் புகார் அளித்துள்ளாரா என்பது தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement