கார்த்தி படத்தில் நடித்துள்ள வனிதாவின் மகன் – எந்த படம் தெரியுமா ? இதோ புகைப்படம்.

0
2237
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமணம் பற்றிய செய்திகள் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்துவந்தது. வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். அதேபோல இவரது முதல் கணவரான ஆகாஷுக்கும் வனிதாவிற்கும் பிறந்த மகன் ஸ்ரீஹரியால் ஏற்பட்ட பிரச்சினைகளும் ஏராளம்.

-விளம்பரம்-

இந்த பிரச்சனைகளால் தான் வனிதா குடும்பத்திற்கும வனிதா விற்கும் ஏகப்பட்ட பிரச்சினைகள் வெடித்தது.வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் வேறு யாருமில்லை சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பாரா அவர் தான். நடிகர் ஆகாஷ் தமிழில் சொக்கத்தங்கம், தாமிரபரணி என்று ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ்.இதையடுத்து மகள்கள் அம்மாவுடனும், மகன் தந்தையுடனும் வளர வேண்டும் என்று தரவிடபட்டது.

தற்போது ஆகாஷ் சினிமாவில் நடிப்பதைவிட்டு விட்டு தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறாராம். வனிதா மற்றும் ஆகேஷை போல இவர்களின் மகனான ஸ்ரீஹரியும் சினிமாவில் நடித்துள்ளார். ஆம், கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் ஸ்ரீஹரி குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். இதை பற்றி வனிதா கூட எந்த பேட்டியிலும் சொன்னது இல்லை.

-விளம்பரம்-
Advertisement