நேரில் அழைத்து பல வீடு உபயோக பொருட்களை வாரி வழங்கிய வருண், நெகிழ்ந்த தாமரை. வைரலாகும் வீடியோ.

0
532
Varun
- Advertisement -

சமீபத்தில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் இடத்தை பிரியங்காவை பெற்றிருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், கடந்த சீசன்களை விட இந்த முறை நிகழ்ச்சியில் பல மாற்றங்களை பிக்பாஸ் கொண்டு வந்திருந்தார். அதிலும் தெரிந்த முகத்தை விட தெரியாத முகங்கள் தான் அதிகமாக இருந்தார்கள். முகம் தெரியாத நபராக அறிமுகமாகி தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் தாமரை. இவர் நாடகக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-
Bigg Boss Thamarai About Varun | தாமரை செல்வி வருண்

இவர் பிக் பாஸில் நுழைந்த ஒரு சில நாட்களிலேயே தனது வெள்ளந்தியான குணத்தால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்பத்தில் அப்பாவி போல இருந்த தாமரை பல வாரங்களை கடந்து புயலாக மாறி டாப் 10 போட்டியாளர்களில் ஒருவராக வந்தது பாராட்டாக்கூடிய ஒன்று. மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தாமரை பலருடன் நல்ல உறவில் இருந்தாலும் வருண் உடன் அதிகமான நெருக்கத்தில் இருந்தார். ஒரு உடன் பிறந்த தம்பியை போல் தாமரை பாவித்தார்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தாமரை சொன்னது:

அதோடு நிகழ்ச்சியில் ஒருமுறை Preethi டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் எபிசோடில் புளு மற்றும் சிகப்பு ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே சமையல் போட்டி வைக்கப்பட்டது. இந்த போட்டியில் புளூ டீம் வெற்றி பெற்றதாக நடுவர் குழு அறிவித்தது. இதனால் வெற்றி பெற்ற புளூ டீம் அணியில் இருந்த தாமரை, அக்சரா, சிபி மற்றும் அபினய் ஆகியோர்களுக்கு கேஸ் ஸ்டவ் பரிசாக வழங்கப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். இந்த அறிவிப்பை கேட்ட உடன் ப்ளூ டீமில் இருந்த மற்றவர்களை விட தாமரை தான் துள்ளி குதித்து இருந்தார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

அதிலும் ‘எங்க வீட்டில் அடுப்பே இல்ல’ என்று மகிழ்ச்சி பொங்க தாமரை கூறியது மற்றவர்களை நெகிழ செய்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது தாமரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றார். அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமை கோலாகலமாக துவங்கியது. ஒரு புது வித பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது.

-விளம்பரம்-

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை:

இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் வனிதா, சினேகன், சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், ஜூலி, தாமரை, சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய 14 பேர் கலந்துகொண்டனர். மேலும், நிகழ்ச்சி தொடங்கி முதல் நாளே பயங்கர கலவரமாக போனது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அல்டிமேட் நிகழ்ச்சியில் வருண் குறித்து தாமரை சில சுவாரஸ்யமான விஷயங்களைபகிர்ந்து இருந்தார்.

வருண் வாங்கி கொடுத்த பொருட்கள் :

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு வருண் டபுள் டோர் கதவு வைத்த கருப்பு கலர் பிரிட்ஜ், ஓவன் எல்லாம் வாங்கி தந்தான். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இதெல்லாம் நான் எடுத்துக்கொண்டு போவேன் என்று சொன்னதை கேட்டு வருண் நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு வாங்கித் தந்திருக்கிறான். ரொம்ப நல்ல பையன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் வருண், தாமரைக்கு பொருட்களை வாங்கி கொடுத்த வீடியோ வெளியாகி இருக்கிறது.

Advertisement