வேலு போனதால் அர்ச்சனா அழுதார்னு நினைப்பீங்க – ஆன, அவர் அழுததுக்கு காரணம் எனக்கு தெரியும்.

0
79301
velu
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் ஒருவர். பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ரேகா வெளியேறிய நிலையில் கடந்த வாரம் வேல்முருகன் வெளியேற்றப்பட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள வேல்முருகன், டிப்ளோமேடிக், குரூப்பிஸம், ஃபேவரிடசம் என்கிற வார்த்தைகளுக்கு எல்லாம் எனக்கு அர்த்தம் தெரியாது.நியாயமாக விளையாடி, யாரையும் காயப்படுத்தாமல், என் டாஸ்க்கைச் சரியாகச் செய்ய நினைத்தேன். பலமுறை என்னை அநியாயமாக நடத்தினார்கள் அந்த இடத்தில் அனிதாவோ, பாலாஜியோ , ஆரியோ இருந்திருந்தால் அவர்கள் பெரிய பிரச்சனை செய்து இருப்பார்கள். ஆனால், அதை நான் செய்யவில்லை.

-விளம்பரம்-

பிக்பாஸ் இல்லத்தில் யாரும் என்னிடம் நெருக்கமாக இல்லை. நானும் கலராக இருந்து, நாலு வார்த்தை இங்கிலீஷ் பேசி இருந்தால் எல்லோருக்கும் நான் நண்பனாகி இருப்பேன் என்னை ஒதுக்கி விட்டார்கள் என் பாடலை கேட்பதற்காக மட்டுமே என்னை பயன்படுத்தினார்கள். இதுதான் உண்மை. சகஜமாக பேசுவதற்கு கூட யோசித்தார்கள். பிறகு நான் போய் அவர்களிடம் என்ன பேசுவது. உண்மையான எண்ணத்தை நான் வெளிப்படுத்தினேன். அர்ச்சனா உள்ளே நுழைந்த போது என்னிடம் ‘நான் வெளியில் பார்த்த வேலு இல்லை’ என்று சொன்னவுடன், நான் என்ன அப்படி மாறிவிட்டேன் என்று யோசித்தேன். அர்ச்சனாவை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். ஆனால் அவர் என்னிடம் சரியாக பேசவில்லை இதுவே சோமிடம் எல்லாம் இரவில் தலையில் எண்ணை தேய்த்துவிட்டு காலெல்லாம் மசாஜ் செய்து விட்டார்.

- Advertisement -

நான் முதலில் சொன்னது போல நாம் ஒரு வேளை கலராக இருந்து கொஞ்சம் ஆங்கிலம் பேசி இருந்தால் நம்மிடம் நன்றாக பழகி இருப்பார்களோ என்னவோ ? அதே போல நான் எங்கே சரியாக பேசி விடுவோமோ என்று அவர் உள்ளே நுழைந்ததும் அப்படி சொன்னார் என்று யோசித்தேன். அதேபோல நான் வெளியே வந்தவுடன் அவர் அழுததை நான் பார்த்தேன். ஒரு நல்ல கலைஞனை நாமும் சேர்ந்து அழித்துவிட்டோம் என்று தான் அழுதார்கள். நிறைய பேர் நினைத்திருப்பார்கள் வேலு போனதால்தான் அர்ச்சனா அழுதார்கள் என்று ஆனால், நல்ல கலைஞனை அனைவரும் சேர்ந்து அழித்துவிட்டோம் என்று அழுதது தான் அந்த அழுகை அது எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார் வேல்முருகன்.

வேல்முருகன் யார் என்று வெளியே வந்து கேட்டால் அவர் அப்பாவி என்றுதான் சொல்வார்கள் அதைத்தாண்டி ரம்யா பாண்டியன் ஒரு டாஸ்கின் போது நான் பெண்களை பற்றி பேசினேன். அப்போது உங்களை நான் தப்பா புரிஞ்சுகிட்டேன் என்று சொன்னார். ஆனால் அதன் பின்னரும் அவர் என்னிடம் சரியாக பேசவில்லை. நான் பிக்பாஸில் நிறைய பேசி இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். பல இடங்களில் என் என் கருத்துக்களை நான் கூற தவறி விட்டேன் என்று இப்போது யோசிக்கிறேன். இருப்பினும் தற்போது உள்ளே இருப்பவர்கள் அனைவரும் வெளியில் வந்தால் என்னிடம் பேசுவார்கள் ஆனால் இப்போது உள்ளே இருப்பவர்கள் வெளியில் வந்து பேசுவார்களா என்று கூட தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement