நான் சினேகனா ? சனம் ஷெட்டியை கட்டிபிடித்தது குறித்து மனம் திறந்த வேல் முருகன்.

0
886
velu
- Advertisement -

பிக்பாஸ் என்றாலே அது கண்டிப்பாக ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயம் நடைபெற்ற விடும் இதில் மூன்று பேராக தொன்றுதொட்டு வருவது கட்டிப்பிடி பிரச்சினைதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்ற ஆரவ் தொடங்கி கடந்த சீசனில் பங்கேற்ற மோகன் வைத்திய வரை இந்த கட்டிப்பிடி வைத்தியம் பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார்கள். அதில் முதல் சீசனில் பங்கேற்ற சினேகன் கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை வாங்கினார். அதேபோல கடந்த சீசனில் பங்கேற்ற மோகன் வைத்தியாவும் கட்டிப்பிடி வைத்தியர் பட்டத்தை பெற்றார். இப்படி ஒரு நிலையில் வேல்முருகன் இந்த கட்டிப்பிடி பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
sanam

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 14 ஆம் தேதி போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு இரண்டு பேராக பிரிந்து விளையாடினார்கள். இந்த டாஸ்கில் ஜோடியாக விளையாடிய சனம் ஷெட்டி மற்றும் வேல் முருகன் வெற்றிபெற்று அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நாமினேஷன் பிராஸ்ஸஸில் இருந்து தப்பி இருந்தனர். இந்த டாஸ்கில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் வேல் முருகன் செய்த செயல் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

- Advertisement -

இந்த டாஸ்கில் வெற்றி பெற்ற பின்னர், வேல்முருகன், வெறித்தனமாக சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்தது சனம்ஷெட்டியையே கொஞ்சம் நெளிய வைத்தது. மேலும் பார்வையாளர்களும் வேல் முருகன் கொஞ்சம் கொஞ்சம் ஓவராக போகிறாரோ என்ற எண்ணமும் ஏற்பட்டது. இதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டு இருந்தன. என்னதான் வெற்றி பெற்றதை கொண்டாடினாலும் சகோதரி போல் என்றாலும் இப்படி வெறித்தனமாகவா கட்டிப்பிடிப்பது என்று பலரும் விமர்சித்து வந்தனர்.

வீடியோவில் 17 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வேல்முருகன் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில் அந்த டாஸ்கில் நானும் சனம் ஷெட்டியும் வெற்றிபெறவே மாட்டோம் என்று பலரும் நினைத்தார்கள். மேலும் இறுதிவரை நாங்கள் இருவருமே கூடையில் பந்தை போடவே இல்லை. ஆனால், இறுதியில் சனம்ஷெட்டி சரியாக கூடையில் பந்தை போட்டு நாமினேசனில் இருந்து நாங்கள் தப்பித்து விட்டோம். அந்த சந்தோஷத்தில் தான் நான் அவரை கட்டி பிடித்தேன். அதற்கு முன்பு இல்லை அதற்கு பின்பு நான் யாரையாவது கட்டிப் பிடித்து இருக்கிறேனா. இதுவே மற்றவர்கள் செய்தால் எதுவும் சொல்லி இருக்க மாட்டார்கள். கருப்பாக இருப்பவர்கள் செய்தால் தான் இந்த பிரச்சனை வரும் அவர்கள் எல்லாம் மனிதர்கள் கிடையாதா இப்போ சினேகன் மனுஷன் இல்லையா என்று கூறியுள்ளார் வேல்முருகன்.

-விளம்பரம்-
Advertisement