இந்த சிறு வயதில் கின்னஸ் சாதனை படைத்த வேல்முருகன் மகள் – நேரில் சந்தித்து வாழ்த்திய முதல்வர்.

0
1046
velmurugan
- Advertisement -

பிக் பாஸ் புகழ் வேல்முருகனின் மகள் கின்னஸ் சாதனை செய்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான பின்னணி பாடகராக திகழ்பவர் வேல்முருகன். இவர் விருதாச்சலம் பகுதியை சேர்ந்தவர். இவர் பின்னணி பாடகர் மட்டுமில்லாமல் நடிகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர். ஆரம்பத்தில் இவர் நாட்டுப்புற பாடகராகத் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமானார். அதற்குப் பிறகு தான் இவர் சினிமாவில் களம் இறங்கினார். இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் ‘மதுர குலுங்க’ என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

ஜேம்ஸ் வசந்தனால் தான் இவருடைய திரை பயணத்திற்கு ஒரு திருப்புமுனையாக இருந்தது என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து இவர் நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால, கழுகு படத்தில் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார். கடைசியாக இவர் ஜி வி பிரகாஷ் இசையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த அசுரன் படத்தில் கத்தரி பூவழகி என்ற பாடலை பாடியிருந்தார்.

- Advertisement -

வேல்முருகனின் திரைப்பயணம்:

இந்த பாடலுக்காக இவர் பல விருதுகளை வாங்கி இருந்தார். தற்போதும் இவர் பல படங்களில் கமிட்டாகி பாடிக்கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் 2020 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக வேல் முருகன் கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். ஆனால், இவரால் நீண்டநாள் பிக்பாஸ் வீட்டில் நீடித்திருக்க முடியவில்லை. அதற்கு பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 2 என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் தன் மனைவியுடன் பங்குபெற்று இருந்தார்.

வேல்முருகன் மகள் செய்த கின்னஸ் சாதனை:

இந்த நிகழ்ச்சியில் இவருடைய திறமை, நடிப்பெல்லாம் மக்கள் மத்தியில் பாராட்டுக்குரிய வகையில் இருந்தது. அதோடு இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு இடம் கிடைத்தது. அதோடு இவர் தன்னுடைய பாட்டு திறமைக்காக பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் வேல்முருகனின் மகள் கின்னஸ் சாதனை படைத்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வேல்முருகன் அவர்கள் தன்னுடன் படித்த கலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

-விளம்பரம்-

வாழ்த்து தெரிவித்த முதல்வர்:

அதில் மூத்த மகள் பெயர் ரக்ஷனா. இவர் ஒரு நிமிடத்தில் 51 பல்கலைக்கழகத்தின் சின்னங்களை அடையாளம் கண்டு சொல்லியிருக்கிறார். இதனால் இவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் பாடகர் வேல்முருகன் தனது குடும்பத்துடன் முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது முதல்வர், பாடகர் வேல்முருகன் மகளை கின்னஸ் சாதனை படைத்ததற்கு பாராட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் மு க ஸ்டாலின் அவர்கள் வேல்முருகன் மகளை பாராட்டி பதிவிட்டிருந்தார்.

வைரலாகும் வேல்முருகன் மகள் புகைப்படம்:

தற்போது மு க ஸ்டாலின் பதிவும், வேல்முருகன் தன் குடும்பத்துடன் முக ஸ்டாலினை சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படமும் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த பலரும் வேல்முருகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருவது மட்டுமில்லாமல் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். சமீபத்தில் கூட சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியலில் நடிக்கும் சிறுவன் கின்னஸ் சாதனை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement