வேல்முருகன், என்ன சனம் ஷெட்டிக்கு கட்டிபிடி வைத்தியமா ? கேலி செய்த பிக் பாஸ் நடிகையின் கணவர்.

0
8681
sanam
- Advertisement -

பிக்பாஸ் என்றாலே அது கண்டிப்பாக ஏதாவது ஒரு சர்ச்சையான விஷயம் நடைபெற்ற விடும் இதில் மூன்று பேராக தொன்றுதொட்டு வருவது கட்டிப்பிடி பிரச்சினைதான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் பங்கேற்ற ஆரவ் தொடங்கி கடந்த சீசனில் பங்கேற்ற மோகன் வைத்திய வரை இந்த கட்டிப்பிடி வைத்தியம் பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிறார்கள். அதில் முதல் சீசனில் பங்கேற்ற சினேகன் கட்டிப்பிடி வைத்தியர் என்ற பெயரை வாங்கினார். அதேபோல கடந்த சீசனில் பங்கேற்ற மோகன் வைத்தியமும் கட்டிப்பிடி வைத்தியர் பட்டத்தை பெற்றார். இப்படி ஒரு நிலையில் வேல்முருகன் இந்த கட்டிப்பிடி பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 14 ஆம் தேதி போட்டியாளர்களுக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு இரண்டு பேராக பிரிந்து விளையாடினார்கள். இந்த டாஸ்கில் ஜோடியாக விளையாடிய சனம் ஷெட்டி மற்றும் வேல் முருகன் வெற்றிபெற்று அடுத்த வாரம் நடைபெற இருக்கும் நாமினேஷன் பிராஸ்ஸஸில் இருந்து தப்பி இருந்தனர். இந்த டாஸ்கில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் வேல் முருகன் செய்த செயல் தான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

இந்த டாஸ்கில் வெற்றி பெற்ற பின்னர், வேல்முருகன், வெறித்தனமாக சனம் ஷெட்டியை கட்டிப்பிடித்தது சனம்ஷெட்டியையே கொஞ்சம் நெளிய வைத்தது. மேலும் பார்வையாளர்களும் வேல் முருகன் கொஞ்சம் கொஞ்சம் ஓவராக போகிறாரோ என்ற எண்ணமும் ஏற்பட்டது. இதுகுறித்து ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. என்னதான் வெற்றி பெற்றதை கொண்டாடினாலும் சகோதரி போல் என்றாலும் இப்படி வெறித்தனமாகவா கட்டிப்பிடிப்பது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், ஒரு சிலரோ, வேல் முருகன், சனம் ஷெட்டியை விட குள்ளமாக இருப்பதால்.அவர் கட்டிப்பிடித்த போது சிலருக்கு தவறாக தெரிகிறது என்று கூறி வருகின்றனர். அவ்வளவு ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரான சுஜா வருனியின் கணவர் சிவகுமார் கூட இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கேலி செய்யும் விதமாக ‘வேல்முருகன், என்ன சனமிற்கு கட்டிபிடி வைத்தியமா’ என்று பதிவிட்டு உள்ளார்.

-விளம்பரம்-

சனம் ஷெட்டியை முதல் நாளில் இருந்தே வேல்முருகன், சகோதரி என்று தான் அழைத்து வருகிறார் . அதே போல சனம்ஷெட்டியும், வேல்முருகனை அண்ணா என்று அன்புடன் பதிலுக்கு அழைத்து வருகிறார் என்பதும்குறிப்பிடத்தக்கது. பிக் பாஸில் ஆடல் பாடல் டாஸ்கின் போது கூட இவர்கள் இருவரும் ‘ஆடலுடன் பாடலை கேட்டு’ பாடலுக்கு நடனமாடியபோது கூட எல்லை மீறவில்லை. வேல்முருகனின் செயல் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

Advertisement