தமிழ் பொண்ணு, சுயபுத்தி இல்ல, முட்டாள் இல்ல.! ஐஸ்வர்யாவை கதறவிட்ட விஜயலக்ஷ்மி.!

0
299

கடந்த சில வாரங்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் சற்று வித்யாசமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்றும், இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் முற்றிலும் வித்யாசமாக நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் தாங்கள் நாமினேட் செய்யும் நபர்களை தனி அறைக்கு அழைத்து சென்று ஒவ்வொருவரிடமும் நாமினேட் செய்வதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

vijayalakshmi

நோமின்டே செய்யப்படும் நபர் தங்களை நாமினேட் செய்பவரை கன்வின்ஸ் செய்து நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொள்ளாலாம். அந்த வகையில் விஜயலக்ஷ்மி , மும்தாஜ், சென்ராயன், ஐஸ்வர்யா ஆகியோரை நாமினேட் செய்ய அழைத்து சென்றார். அப்போது ஐஸ்வர்யாவிடம் இருக்கும் குறையை தெரிவித்த விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யாவிடம், நான் இப்பயும் சொல்கிறேன் உங்களுக்கு சுயபுத்தி என்பது இல்லை, தனித்து நின்று இந்த போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றால் நீங்க பின் தங்கி இருப்பீங்க, நீங்க ஒரு கேள்வி கேட்டீங்க இந்த போட்டில தமிழ் பொண்ணுங்க மட்டும் தான் வருனுமான.

உங்களுக்கு தமிழ் நாடு பத்தி தெரியாது ஹிஸ்டரி எடுத்து பாருங்க, புடிச்சா தலைல தூக்கி வெச்சி ஆடுவோம், பாசம் கட்டுவாங்க. ஆனா முட்டாள் இல்ல நீங்க நியாயமா இருப்பீங்களானு மட்டும் தான் பாப்பாங்க. அந்த கேள்விக்கு பதில் தெரியும்னுன நீங்க மக்கள் விட்ட போயிட்டு வரணும். நீங்க போயிட்டு வந்த நீங்க தகுதியானவங்கனு நான் ஒதுக்குற என்கிறார்.

Aishwarya

இதனால் கோபமடைந்த ஐஸ்வர்யா, எத்தனை நாள் என்ன உங்களுக்கு தெரியும் என்று விஜயலட்சுமியை கேட்க, அதற்கு விஜ்யலக்ஷ்மி நான் உங்களை பற்றி தெரிந்து கொள்ள ஒரு நாள் போதும் என்கிறார்.அதற்கு ஐஸ்வர்யா, நீங்க என்ன பத்தி ஒரு நாள்ள தெரிஞ்சிக்க முடியும்னா, நீங்க ஒன்னும் புத்திசாலி கிடையாது. நான் உங்கள் கருத்துக்களை நான் மதிக்க மாட்டேன் என்று கூறுகிறார். அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து இருவருக்கும் வாய் வாக்குவாதம் முற்றி போக விஜயலட்சுமியை, என்ன பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் என்று ஐஸ்வர்யா கேட்க, உங்களை பற்றி அறிந்துகொள்ள ஒரு எபிசொட் போதாதா , உங்கள பத்தி நான் ராணி மஹா ராணி டஸ்க்லே பாத்துட்ட என்று நெத்தியடியாக பதிலளித்து விடுகிறார்.

இறுதியில் ஹிட்ளர் டாஸ்க் அப்போ பிக் பாஸ் என்ன சொன்னாருன்னு உங்களுக்கு தெரியாது. தெரியாமல் பேசாதீங்க என்ற ஐஸ்வர்யா கூற. அதற்கு விஜயலக்ஷ்மி நானும் பேச வேண்டும் இது தான் என்னோட டாஸ்க் என்று கூறிவிடுகிறார். இருவரும் பேசி முடித்த பின்னர் வெளியே வந்த விஜயலக்ஷ்மி, நான் ஐஸ்வர்யாவை நாமினேட் செய்த போது இம்மெச்சூரான(முதிரா புத்தியுடைய) ஐஸ்வர்யாவிடம் நான் போட்டி போட்றது எனக்கு உடன்பாடில்லை என்று கூறிவிட்டு ஐஸ்வர்யாவை நாமினேட் செய்து விடுகிறார்.

vijayalakshmi

இதுவரை ஐஸ்வர்யா பிக் பாஸ் வீட்டில் எத்தனையோ எரிச்சலூட்டும் செயல்களை செய்திருக்கிறார். அவர் அசிங்கப்படுத்திய பாலாஜி, மும்தாஜ் கூட ஐஸ்வர்யா தெரியாமல் செய்து விட்டார் என்று இப்பொது சகஜமாக இருந்து வருகின்றனர். இத்தனை நாள் வரை ஐஸ்வர்யாவை பொன்னமலத்திற்கு பிறகு யாரும் கேள்வி கேட்காமல் அட்ஜஸ்ட் செய்து நடந்து வருகின்றனர். ஆனால், ஐஸ்வர்யாவை வெளியே இருந்து பார்த்து பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற விஜயலக்ஷ்மி ஐஸ்வர்யாவின் குணத்தை நேரடியாகவே விமர்சனம் செய்து விட்டார். இது எனவே கண்டிப்பாக விஜயலக்ஷ்மி, ஐஸ்வர்யாவிற்கு ஒரு வலுவான போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.